மாஸ்கோவில் கோலாகலமாக நடைபெற்ற ரஷ்யாவின் வெற்றிநாள் கொண்டாட்டம்

மாஸ்கோவில் கோலாகலமாக நடைபெற்ற ரஷ்யாவின் வெற்றிநாள் கொண்டாட்டம்
(Twitter)
  • Share this:
இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன் 75ம் ஆண்டு விழாவில் பன்னாட்டு வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு மாஸ்கோவில் கோலாகலமாக நடைபெற்றது.

நாசி ஜெர்மனியை சோவியத் ரஷ்யா 2-ம் உலகப்போரில் வென்றதன் 75ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி ரஷ்யாவில் நடைபெற்றது. கடந்த மே மாதம் 9ம் தேதி நடக்கவிருந்த இந்த விழா, கொரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

செஞ்சதுக்கத்தில் நடந்த ராணுவ வீரர்களின் அணிவகுப்புக்காக வீரர்கள் முன்பே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இன்று நடந்த அணிவகுப்பில் சுமார் 14,000 வீரர்கள் மெய்சிலிர்க்கவைக்கும் அணிவகுப்பை நடத்தினர்.Also read... பிரதமரின் பரிந்துரையின் பேரில் சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைப்பு

இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 90 நிமிடங்கள் கம்பீர நடைபோட்டனர். இந்த அணிவகுப்பை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீன அமைச்சர்களும் தனிநபர் இடைவெளியுடன் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கண்டுகளித்தனர்.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading