• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் : உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் : உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

கோத்தபய ராஜபக்சே

கோத்தபய ராஜபக்சே

உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் போன்ற பல்வேறு காரணங்களால், இலங்கையில் உணவுப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே பொருளாதார அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் பிரதான வருவாய்த் துறையான சுற்றுலாதுறை முடக்கத்தால் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி கைஇருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் பண மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது.

    எனவே, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் இருப்பு குறைவாலும், பதுக்கல் அதிகரிப்பாலும் நாட்டில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் நாட்டில் பொருளாதார அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார். இதன் மூலம், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட முக்கிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    இதற்காக, ராணுவ முன்னாள் தளபதி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் ஆணையராக அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. வர்த்தகர்கள், சில்லறை வியாபாரிகள் பதுக்கும் உணவுப்பொருட்களை பறிமுதல் செய்யவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    அரிசி, சர்க்கரை, நெல் போன்ற உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து, மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்காக, அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : வறுமையின் பிடியில் ஆப்கான்: கடும் பண நெருக்கடி- மக்களின் துயரம்

    இந்நிலையில், எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும்படி வாகன ஓட்டிகளை இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: