ஹோம் /நியூஸ் /உலகம் /

சிஏஏ-வுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று இரவு விவாதம்

சிஏஏ-வுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று இரவு விவாதம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்திய நேரப்படி இரவு 10.45 மணியளவில் விவாதம் தொடங்க உள்ளது. இதன் மீது நாளை மாலை 4.30 மணியளவில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீது இன்றிரவு விவாதம் நடைபெறுகிறது.

  குடியுரிமை திருத்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் 5 அமைப்புகள் சார்பில் 6 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

  இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், சர்வதேச மனித உரிமை விதிகளுக்கும், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே 2005 ஆண்டு நிறைவேற்றப்பட்ட மனித உரிமை ஒப்பந்தத்திற்கும் எதிராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  இந்த சட்டத்தால் உலக அலவில் அதிக அதிகள் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேசியவாதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாகவும், இச்சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  இந்நிலையில், பிரஸ்ஸெல்ஸ் நகரில் இன்று கூடும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்படுகிறது.

  இந்திய நேரப்படி இரவு 10.45 மணியளவில் விவாதம் தொடங்க உள்ளது. இதன் மீது நாளை மாலை 4.30 மணியளவில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பின் இந்திய அரசுக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: Citizenship Amendment Act