Home /News /international /

கணக்கில்லாமல் அனுமதி வழங்கும் நேபாளம்: எவரெஸ்டில் அதிகரிக்கும் மரணங்கள்!

கணக்கில்லாமல் அனுமதி வழங்கும் நேபாளம்: எவரெஸ்டில் அதிகரிக்கும் மரணங்கள்!

கோப்புப்படம்

கோப்புப்படம்

பிரச்னை இருப்பதை அறிந்தும் நேபாள அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து அனுமதி வழங்கி வருவது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
நேபாள அரசு கணக்கில்லாமல் எவரெஸ்ட் சிகரம் ஏற அனுமதி அளிப்பதால் கூட்டம் பெருகி மலை ஏறுவோர் பலியாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலகின் உயரமான மலைச்சிகரமாக உள்ள எவரெஸ்ட் சிகரம் மீது ஏற, உலகம் முழுவதும் இருந்து மக்கள் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். கடந்த சில வாரங்களாக மலை ஏற்றத்துக்கான கூட்டம் கடுமையாக அதிகரித்து வருகிறது. ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் மலை ஏறி வரும் ஒரு புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.

எவரெஸ்ட் நெரிசல் குறித்து சர்வதேச ஊடகங்கள் வரையில் செய்திகள் வெளியிட்டு வந்தபோதும், எவ்வித கவனிப்பும் விதிமுறைகளும் இன்றியே இதுவரையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 12 மணி நேரத்தில் நிறைவடைய வேண்டிய மலை ஏற்றப் பயணம் 17 மணி நேரம் வரையில் ஆவதால் தொடர்ச்சியாக மலை ஏற எவரெஸ்ட் வருவோர் கடும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளனர்.

எவ்வித முன் அனுபவம், பயிற்சி, கைட் உதவி என எதுவும் இல்லாமல் பலரும் மலை ஏற வருவதாலே கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலரும் பலியாகி வருகிவதாக பயிற்சி பெற்ற மலையேற்ற விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

கூடுதலாக, பிரச்னை இருப்பதை அறிந்தும் நேபாள அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து யார் அனுமதி கேட்டாலும் அனுமதி உத்தரவு வழங்கி வருவதையும் முழு நேர மலையேற்ற வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: எவரெஸ்ட் சிகரம் ஏற அலைமோதும் கூட்டத்தால் அதிகரிக்கும் மரணங்கள்..!
Published by:Rahini M
First published:

Tags: Mount Everest

அடுத்த செய்தி