ஹோம் /நியூஸ் /உலகம் /

உறைந்து கிடக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி... அமெரிக்க பனிப்புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60ஐத் தாண்டியுள்ளது!

உறைந்து கிடக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி... அமெரிக்க பனிப்புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60ஐத் தாண்டியுள்ளது!

பாம் பனிப்புயல்

பாம் பனிப்புயல்

இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக, நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போய் காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அமெரிக்காவில் பாம் சூறாவளி எனப்படும் பனிப்புயலில் சிக்கி இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்நாட்டின் பல பகுதிகளிலும் இந்தப் பனிப் புயலின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு(பாம்) சூறாவளி என்று அழைக்கப்படும் பனிப்புயல் வீசி வருவதால், வெப்பநிலை - 27 டிகிரிக்கு கீழ் சென்றுள்ளது. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் ஆகியவை பனியில் உறைந்துள்ளதோடு, பல பகுதிகளில் மின்சார விநியோகமும் தடைபட்டுள்ளது. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கார்களில் பயணித்த பலர், கடும் பனிப்பொழிவு காரணமாக, வாகனங்களிலேயே சிக்கி உயிரிழந்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால், சியேரா நெவாடாவில் வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய புளோரிடாவில் கார்கள், வீடுகள் அனைத்தும் பனிக்கட்டிகளால் சூழப்பட்டு காட்சியளிக்கின்றன. மருத்துவ உதவியைக் கூடப் பெற முடியாமல் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயலிழந்துள்ளன. மலைப்பகுதிகளில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக, நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் நயாகரா உறைந்து போய் காணப்படுகிறது. சில இடங்களில் மட்டும், நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

பனிப்புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஐ தாண்டியுள்ள நிலையில், 1977ஆம் ஆண்டு பனிப்புயலில் நேர்ந்த உயிரிழப்புகளைவிட தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Strom, United States of America