Home /News /international /

ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் உயிரிழந்தோர் எத்தனை பேர்? ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் உயிரிழந்தோர் எத்தனை பேர்? ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் உயிரிழந்தோர் விவரம்

ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் உயிரிழந்தோர் விவரம்

Russia - Ukraine War | உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் இதுவரை உயிரிழந்த பொதுமக்களின் விவரத்தை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

    ரஷ்யா-உக்ரைன் இடையே உச்சகட்ட போர் நடந்து வரும் நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சனிக்கிழமை ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால் தனக்கு இருக்கும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தீர்மானத்தை தோல்வியடையச் செய்தது. இந்நிலையில், உக்ரைன் மக்கள் மீது இனப்படுகொலை நடத்தியுள்ள ரஷ்யாவுக்கு வீட்டோ அதிகாரத்தை நீக்க வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸுக்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி டிவிட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்நிலையில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைனில் இதுவரை 7 குழந்தைகள் 102 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைனில் இருந்து சாரை சாரையாக வெளியேறும் மக்களுக்கு உலகின் பல நாடுகளும் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றன. ஸ்லோவாக்கியா எல்லையில் அகதிகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் அளிக்கப்பட்டு வருகிறது. ஏராளமானோர் கார்கள் மற்றும் வாகனங்களில் பக்கத்து நாடுகளுக்கு செல்வதால், உக்ரைன் எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதுவரை ஒன்றரை லட்சம் பேர் உக்ரைனில் இருந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலைமை மேலும் மோசமடைந்து வருவதால் 40 லட்சம் பேர் வரை போலந்து, மால்டோவா, ஹங்கேரி, ருமேனியாவுக்கு அகதிகளாக செல்லக்கூடும் என ஐநா கணித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் போலந்தில் தஞ்சமடைய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

    Also Read : உக்ரைனுடனான போருக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு. 48 ரஷ்ய நகரங்களில் போராடியவர்கள் மீது தடியடி

    ரஷ்யாவின் திடீர் படையெடுப்பால் உக்ரைனில் சுமார் மூன்றரை லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. தங்கள் தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு அகதிகளாக சிறுவர்கள் செல்வதால் அவர்கள் கல்வி பாதிக்கப்படும் என்றும் யூனிசெஃப் அமைப்பு எச்சரித்துள்ளது. போலந்து, ஸ்லோவோகியா நாடுகளில் தற்காலிக அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள சிறுவர்களுக்கு கூடாரங்களிலேயே பாடங்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி