முகப்பு /செய்தி /உலகம் / துருக்கி நிலநடுக்கம்: 3-ம் நாளாக நடைபெற்று வரும் மீட்பு பணிகள்... பலி எண்ணிக்கை 16,000 ஆக உயர்வு!

துருக்கி நிலநடுக்கம்: 3-ம் நாளாக நடைபெற்று வரும் மீட்பு பணிகள்... பலி எண்ணிக்கை 16,000 ஆக உயர்வு!

துருக்கி நிலநடுக்கம்

துருக்கி நிலநடுக்கம்

புல்டோசர்கள் மற்றும் கிரேன்கள் இல்லாததால் சிரியாவில் மீட்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaTurkeyTurkey

துருக்கி, சிரியாவில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,000 கடந்துள்ளது. துருக்கியை புரட்டிப்போட்ட பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

துருக்கி மற்றும் சிரியா எல்லையில், கடந்த திங்கட்கிழமை 7.8 என்ற ரிக்டர் அளவில், ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்நாடுகளை புரட்டிப் போட்டுள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், காராமன்மரா உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்ட துருக்கி அதிபர் தயீப் எர்டோகனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மீட்பு பணிகள் மெதுவாக நடைபெறுவதை ஏற்றுகொண்டுள்ள அதிபர் எர்டோகன், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற இயற்கை பேரிடர் காலத்தில், ஒற்றுமை தேவை என்றும், மக்களிடையே எதிர்மறை பிரசாரம் செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் போதுமான புல்டோசர்கள் மற்றும் கிரேன்கள் இல்லாததால் சிரியாவில் மீட்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் பொருளாதார தடையும் இருப்பதால் போதிய எரிபொருள் வசதியும் இல்லாத நிலை உள்ளது என அந்நாட்டு அரசின் ஆலோசகர் பூதைனா ஷப்பான் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Earthquake, Syria, Turkey Earthquake