• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அமெரிக்காவை கலங்கடித்த சூறாவளி...!

அமெரிக்காவை கலங்கடித்த சூறாவளி...!

சூறாவளிப் புயலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாகாண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவில் வீசிய கடும் சூறாவளியில் சிக்கி 23பேர் உயிரிழந்தனர். புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதி மற்றும் ஜார்ஜியா மாகாணத்தின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று சுழன்றடித்தது.

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரக்கிளைகள் வீடுகளுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் சாய்ந்தன. வணிக வளாகங்களின் பலகைகள், செல்போன் கோபுரங்களும் கீழே சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளதால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக லீ கவுண்டியின் பீராகார்டு பகுதியில் 5,000-கும் மேற்பட்ட இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற சூறாவளியை எதிர்கொண்டதில்லை என அலபாமா மாகாண மக்கள் தெரிவித்தனர்.

புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சாலையில் கிடக்கும் மரங்கள், சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் வெளிச்சமின்மை காரணமாக ஒருசில இடங்களில் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சூறாவளிப் புயலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கடுமையான சூறாவளி வீசக்கூடும் என்றபதால், அவசரகால நடவடிக்கைகளை அலபாமா மாகாண நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.

சூறாவளிப் புயலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாகாண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Also see...  மகா சிவராத்திரி: கும்பமேளாவில் 1 கோடி பக்தர்கள் புனித நீராடல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: