பிலிப்பைன்ஸ் நாட்டில் வலிமையான நிலநடுக்கம்...10 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு!

இதுவரையில் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் வலிமையான நிலநடுக்கம்...10 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு!
(Reuters)
  • News18
  • Last Updated: November 3, 2019, 8:48 PM IST
  • Share this:
மிகவும் வலிமைவாய்ந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் நிலநடுக்கம் 6.6 ஆகப் பதிவாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். மக்கள் உணவு இன்றி சாலைகளில் பிச்சை எடுக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து பணியாற்றி வந்தாலும் சேதம் அதிகம் என்பதால் சிக்கல் நீடிக்கிறது.

பலியானோரின் சரியான எண்ணிக்கை இதுவரையில் தெரியவில்லை. சேதாரம் அதிகம் என்பதால் தற்போது வரையில் சுமார் 21 பேர் நிலநடுக்கத்தால் பலி ஆகியுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பல இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பேரிடர் மீட்புப் படையினரால் பணியில் ஈடுபட முடியவில்லை.


இதுவரையில் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். மலைச்சரிவுகளில் சிக்கியுள்ளோரை ஹெலிகாப்டர் கொண்டு மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் பார்க்க: லாஸ் ஏஞ்சல்சில் காட்டுத்தீ... இருப்பிடம் இன்றி தவித்த அர்னால்டு உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள்!

தொடரும் மழையால் நிரம்பும் நீர்நிலைகள்
First published: November 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்