• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனா பெருந்தொற்று: அமெரிக்காவில் 17000-ஐ நெருங்கியது உயிரிழப்பு எண்ணிக்கை..!

கொரோனா பெருந்தொற்று: அமெரிக்காவில் 17000-ஐ நெருங்கியது உயிரிழப்பு எண்ணிக்கை..!

மாதிரி படம்

மாதிரி படம்

ஸ்பெயினில் நேற்று 655 பேர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது

  • Share this:
    உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், உயிரிழப்போர் எண்ணிக்கையும் உச்சம் தொட்டுள்ளது. சுமார் 4 லட்சத்து 68 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு 17 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் நேற்று 655 பேர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது. ஜெர்மனியில் பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ள நிலையில், உயிரிழப்புகள் கட்டுக்குள்ளேயே உள்ளது. பிரான்சில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. 12 ஆயிரத்து 210 பேர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: