கிரிப்டோகரன்ஸி பயன்படுத்துகிறீர்களா? 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

சர்வதேச அளவில் பிட்காயின் என்பது முன்னணியில் உள்ள கிரிப்டோகரன்ஸி ஆகும்.

Web Desk | news18
Updated: June 10, 2019, 11:40 AM IST
கிரிப்டோகரன்ஸி பயன்படுத்துகிறீர்களா? 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
பிட்காயின்
Web Desk | news18
Updated: June 10, 2019, 11:40 AM IST
கிரிப்டோகரன்ஸி பயன்படுத்துவது, வைத்திருப்பது, விற்பது போன்ற எந்த செயலில் ஈடுபட்டாலும் இந்தியாவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

கிரிப்டோகரன்ஸி தடை மற்றும் டிஜிட்டல் கரன்ஸி கட்டுப்பாடு மசோதா 2019-ன் கீழ் இந்தியாவில் கிரிப்டோகரன்ஸி உடன் எந்தவிதமான தொடர்பு இருந்தாலும் அவர்களுக்கு இந்தியாவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுவதுமாக சட்டவிரோத நடவடிக்கை என முத்திரை குத்தப்பட்டுள்ள கிரிப்டோகரன்ஸி பயன்பாட்டின் கீழ் கைது செய்யப்பட்டால், அதற்கு ஜாமீன் வழங்கப்படாது. சர்வதேச அளவில் பிட்காயின் என்பது முன்னணியில் உள்ள கிரிப்டோகரன்ஸி.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ய இந்தக் கிரிப்டோகரன்ஸிகள் பயன்படுத்தப்படுவதால் இந்திய வருமான வரித்துறை மற்றும் மத்திய மறைமுக வரிவிதிப்பு ஆணையம் கிரிப்டோகரன்ஸி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

மேலும் பார்க்க: சீனாவுக்கு எதிராக லட்சக்கணக்கில் மக்கள் போராட்டம் - அதிர்ந்த ஹாங்காங்!
First published: June 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...