Home /News /international /

கனடாவில் கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரி கத்திகுத்து தாக்குதல் - 10 பேர் பலி, 15 படுகாயம்

கனடாவில் கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரி கத்திகுத்து தாக்குதல் - 10 பேர் பலி, 15 படுகாயம்

கனாடா கத்திகுத்து தாக்குதலில் 10 பேர் பலி

கனாடா கத்திகுத்து தாக்குதலில் 10 பேர் பலி

இந்த தாக்குதல் கொடூரமானது இதயத்தை உடைக்கும் வேதனையை தருவது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaOttawaOttawa
    கனடா நாட்டில் பொதுமக்கள் மீது மர்ம நபர்கள் இருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    வட அமெரிக்க நாடான கனடாவில் சஸ்கட்சாவான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த மாகாணத்தின் ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

    இரு நபர்கள் தங்களிடம் இருந்த கத்தியை கொண்டு கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இவர்களின் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர்களின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க டமியன் சண்டர்சன், மைலஸ் சண்டர்சன் ஆகிய இருவரும் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இருவரின் புகைப்படத்தையும் காவல்துறை வெளியிட்டு அவர்களை தேடும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.


    இந்த தாக்குதலின் பின்னணி குறித்து காவல்துறை விசாரித்து வரும் நிலையில், சுமார் 25,000 பேர் வசிக்கும் ஜேம்ஸ் ஸ்மித் கிரி நேஷன் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ரஷ்யா உக்ரைன் போரைக் காட்சிப்படுத்திய பத்திரிக்கையாளர் - விசா டி'ஓர் விருது வழங்கி கௌரவம்!

    இந்த கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேதனை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில்,"சஸ்காட்செவனில் இன்று நடந்த தாக்குதல்கள் கொடூரமானது. இதயத்தை உடையவைக்கும் இந்த நிகழ்வில், தங்களை நேசிப்பவரை இழந்து தவிப்பவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை எண்ணி நான் வேதனை கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Canada, Stabbed

    அடுத்த செய்தி