பயங்கர வெப்ப அலை: கனடா, அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்டோர் பலி

தெருமுனைகளில் நீரூற்றுகள்.

மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் முன் எப்போதும் இல்லாத அளவில் வெப்பம் அதிகரித்துள்ளது. கடுமையாக வீசும் அனல் காற்றுக்கு, 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

 • Share this:
  கடும் வெயில் தாக்கி வெப்ப அலைகள் உருவானதால் ஆங்காங்கே கூலிங் மையங்கள் உருவாக்கப்பட்டன.

  கனடாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கடும் அனல் காற்று வீசி வருகிறது. இங்குள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வாரம், 45 டிகிரி செல்சியசாக பதிவான வெப்பநிலை, தற்போது, 49.5 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. வான்கூவர் நகரில் மட்டும் அனல் காற்றுக்கு 134 பேர் பலியாகியுள்ளனர்.

  Also Read: அன்னிய சக்திகள் சீண்டினால் அவர்கள்  சீனப்பெருஞ்சுவரில் மோதி தகர்க்கப்படுவார்கள்: சீன அதிபர் ஜின்பிங் ஆவேசம்

  பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த 26 - 30ம் தேதிக்குள் அனல் காற்று மற்றும் வெப்பத்துக்கு 486 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கனடாவில் அனல் காற்று தொடர்ந்து வீசும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள்பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெப்பத்தை தணிக்க கடற்கரைகளிலும், நீச்சல் குளங்களிலும் குவிந்து கிடக்கும் நிலைக்கு, பெரும்பாலானோர் தள்ளப்பட்டுள்ளனர்.கடும் வெப்பம் காரணமாக கனடாவின் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

  கனடா மட்டுமின்றி, அமெரிக்காவின் மேற்கு பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. காட்டுத் தீயாலும் பாதிப்பு கடும் வெப்பம், அனல் காற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ள கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணம், காட்டுத்தீயாலும் பாதிக்கப்பட்டுள்ளது.  கடும் வெப்பம் காரணமாக, மேற்கு கனடாவில் உள்ள வனப்பகுதியில் தீப்பிடித்துள்ளது. தீ வேகமாக பரவி வருவதையடுத்து, வனப்பகுதியை ஒட்டியுள்ள பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தின் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அமெரிக்காவின் வடமேற்கு மாகாணமான வாஷிங்டனில் 16 பேர் வெயிலுக்கு பலியாகியுள்ளனர்.

  வான்கூவர் பகுதியில் வெப்ப அலை காரணமாக பள்ளிகள், கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன. தெரு மூலைகளில் தற்காலிக நீரூற்றுகளையும் பனிப்புகை நிலையங்களையும் அங்கு உருவாக்கியுள்ளனர். அனைவருக்கும் குடிநீர் பாட்டில்களும் தொப்பிகளும் வழங்கப்பட்டன.
  Published by:Muthukumar
  First published: