துருக்கி, கிரிஸ் நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- கட்டடங்கள் இடிந்தன: 4 பேர் உயிரிழப்பு

துருக்கி மற்றும் கிரிஸ் நாடுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி, கிரிஸ் நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- கட்டடங்கள் இடிந்தன: 4 பேர் உயிரிழப்பு
துருக்கி நிலநடுக்கம்
  • Share this:
துருக்கி மற்றும் கிரீஸில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் அந்நாட்டில் பல கட்டங்கள் சேதமடைந்தது. இந்த நிலநடுக்கம் அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையத்தில் 7.0 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் துருக்கி கடற்கரையில் சமோஸ் தீவின் வடக்குப் பகுதியில் நியான் கார்லோவேசனுக்கு வடகிழக்கில் 8.5 மைல் தொலைவில் ஏஜியன் கடல் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் இஸ்மிர் பகுதியில் ஒரு முழு கட்டிடமே முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. இதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். ஏகன், மர்மரா பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கிரீஸ் நாட்டின் கிழக்கு தீவுகள், கிரீஸ் தலைநகர் ஏத்தன்ஸ் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சாமோஸ் மற்றும் இதர தீவுகளில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.


பல இடங்களில் மலைப் பாறைகள் சரிந்துள்ளன. கிரீஸ், துருக்கி இரு நாடுகளிலும் நில நடுக்கத்திற்கு பின் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. மேலும், இஸ்மிரில் கடல் அலை எழுந்து நகருக்குள் புகுந்து தெருக்களில் வெள்ளமாக நிற்கிறது.
First published: October 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading