Home /News /international /

இறந்த பெண் இறுதிச்சடங்கில் எழுந்து உட்கார்ந்த அதிர்ச்சி..!

இறந்த பெண் இறுதிச்சடங்கில் எழுந்து உட்கார்ந்த அதிர்ச்சி..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இறந்துவிட்டதாக சான்றிதழ் கொடுத்து அனுப்பிய அதே மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்லார் அந்த பெண்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    பாகிஸ்தானில் இறந்ததாக கூறப்பட்ட  பெண் ஒருவருக்கு இறுதிச்சடங்கு செய்து கொண்டிருந்தபோது, அந்தப் பெண் எழுந்து உட்கார்ந்தது அங்கிருந்தோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    ரஷீதா என்ற அந்தப் பெண் உடல்நலக் கோளாறின் காரணமாக கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் உடல்நலக் குறைபாட்டால் இறந்துவிட்டதாக கராச்சியில் உள்ள அப்பாசி சாகித் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்தனர்.

    ரஷீதாவின் இறப்பை உறுதி செய்யும் வகையில் அந்த மருத்துவமனை சார்பில் இறப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ரஷீதாவுக்கான இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

    இறுதிச்சடங்கில் குளிக்க வைக்கும் நிகழ்வின் போது ரஷீதாவின் மூட்டுகளில் அசைவு இருப்பதை அவரது மருமகள் உணர்ந்துள்ளார்.

    அதன் பின்னர் உடனடியாக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரஷீதா தற்போது அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

    மேலும் பார்க்க: விவாகரத்து அழைப்பிதழ்- பந்தாவான இந்தியத் திருமணங்களை கலாய்க்கும் ஓவியர்...!
    Published by:Rahini M
    First published:

    Tags: Karachi, Pakistan News in Tamil, Trending

    அடுத்த செய்தி