கின்னஸ் சாதனை முயற்சி: விபத்தில் உயிரிழந்த பைக் சாகச வீரர்!

பைக் சாகச வீரர் உயிரிழப்பு

தனது பைக்கில் வேகமாக வந்த அவர், சாகசத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ஓடுதளத்தில் இருந்து சீறிப் பறந்தார். அப்போது எதிர்பாராத விதமாக  மணல் குன்று மீது அவரது பைக் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், அலெக்ஸ் ஹார்விலின் தலைக்கவசம் தனியாக கழன்று போய் விழுந்தது

  • Share this:
பிரபல பைக் சாகச வீரரான அலெக்ஸ் ஹார்வில் கின்னஸ் சாதனை முயற்சிக்கான பயிற்சியின்போது  உயிரிழந்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் ஹார்வில். 28 வயதான இவருக்கு பைக் சாகசங்கள் என்றால் அலாதிபிரியம் .  இதுவரை பல்வேறு பைக் சாகசங்களை படைத்துள்ள அவர், பைக் சாகசத்தில் கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய  கின்னஸ் சாதனையை  தானே முந்த எண்ணிய அலெக்ஸ் அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

வாஷிங்டன் நகரில் உள்ள மோசஸ் எரி அருகே  அவர் பைக்  சாகச பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.  தனது பைக்கில் வேகமாக வந்த அவர், சாகசத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ஓடுதளத்தில் இருந்து சீறிப் பறந்தார். அப்போது எதிர்பாராத விதமாக  மணல் குன்று மீது அவரது பைக் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், அலெக்ஸ் ஹார்விலின் தலைக்கவசம் தனியாக கழன்று போய் விழுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பலத்த காயமடைந்த அலெக்ஸ் ஹார்வில் சமாரிட்டன் மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும்  சிகிச்சை பலனின்று அலெக்ஸ் ஹார்வில் உயிரிழந்தார்.

அலெக்ஸ் ஹார்வில் மரணத்துக்கு காரணமாக அமைந்த  பைக் சாகச காட்சியை ஒருசிலர் வீடியோ எடுத்துள்ளனர். அதில், ஹார்விலின் பைக் மோதி விபத்துக்கு உள்ளாகும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவரது ரசிகர்கள் இதனை வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர்.
Published by:Murugesh M
First published: