இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்த ஸ்காட்லாந்து கோடீஸ்வரர்!

உள்ளூர் அமைப்பு ஒன்று, வெளிநாட்டு இயக்கத்தின் உதவியோடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: April 22, 2019, 8:21 PM IST
இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்த ஸ்காட்லாந்து கோடீஸ்வரர்!
போவல்சன்
news18
Updated: April 22, 2019, 8:21 PM IST
இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெரும் செல்வந்தர் ஆன்ட்ரேஸ் ஹோல்ச் பேவல்சன் தனது நான்கு குழந்தைகளில் மூவரை பலி கொடுத்துள்ளார்.

இலங்கையில் நேற்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் என மொத்தம் 8 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. அடுத்தடுத்த தொடர் குண்டு வெடிப்பால் ஒட்டுமொத்த நாடும் அமைதி குலைந்துள்ளது.

இந்த கோர தாக்குதல்களில் சுமார் 300 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஈஸ்டர் தினத்தை ஒட்டி காலையில் தேவாலயத்துக்கு மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றவர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்பியுள்ளனர்.


படிக்க... இலங்கை குண்டுவெடிப்பில் வங்கப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் உயிரிழப்பு!

சொல்லில் அடங்கா துயரத்தில் இலங்கை தள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் அமைப்பு ஒன்று, வெளிநாட்டு இயக்கத்தின் உதவியோடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பில் பல வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆன்ட்ரேஸ் ஹோல்ச் போவல்சன், தனது நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகளை பறிகொடுத்துள்ளார்.

Loading...

விடுமுறைக்காக அவர் இலங்கைக்கு வந்திருந்த நிலையில், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. எனினும், அவரது குழந்தைகளின் உடல்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஸ்காட்லாந்தின் மொத்த பரப்பளவில் 1 சதவிகிதம் போவல்சனுக்கு சொந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

Photos | இலங்கை குண்டுவெடிப்பு ஏற்படுத்திய கோரம்இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.... கிளிக் செய்க
First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...