ஹோம் /நியூஸ் /உலகம் /

சீனாவில் கொரோனா லாக்டவுனுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

சீனாவில் கொரோனா லாக்டவுனுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

சீனாவில் லாக்டவுனுக்கு எதிராக மக்கள் போராட்டம்

சீனாவில் லாக்டவுனுக்கு எதிராக மக்கள் போராட்டம்

சீனாவில் அரசு விதித்துள்ள லாக்டவுன் அறிவிப்புக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaBeijingBeijing

    இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகையே வாட்டிவதைத்த கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பானது 2019ஆம் ஆண்டில் முதல்முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டது. அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் முதல் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சுகாதார மையத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது.

    இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தடுப்பூசி உள்ளிட்ட யுக்திகளைக் கொண்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அதேவேளை, சீனாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக வேகமாக தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் தினசரி பாதிப்பு தற்போது 33,000 தாண்டியுள்ளது. குறிப்பாக பெய்ஜிங், ஷாங்காய், குவாங்ஸோ ஆகிய மாகாணங்களில் கோவிட் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தியுள்ளனர்.

    சீனா அரசு கோவிட் பரவலை தடுக்க ஜீரோ கோவிட் பாலிசி(Zero Covid Policy) என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஒன்று, இரண்டு பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்நாட்டு அரசு ஒட்டுமொத்த நகரத்திற்கே லாக்டவுன் அறிவித்து, அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாகவே இந்த கடுமையான நடைமுறையை சந்தித்து வரும் அந்நாட்டு மக்கள் தற்போது கொந்தளித்து போய் உள்ளனர். இதற்கு ஒரு தீர்வே கிடையாதா என்ற நோக்கில் தெருக்களில் இறங்கி தீவிரமாக போராடி வருகின்றனர்.

    உலகிலேயே ஐபோன் தயாரிக்கும் மிகப் பெரிய ஆலை உள்ள ஷெங்ஸோ நகரில் உள்ளது. இங்கு 60 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில், கொரோனா பரவல் காரணமாக 5 நாள்கள் முழு லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திய நிலையில், இந்த போராட்டத்தில் காவல்துறை மற்றும் பொது மக்களுக்கு இடையே மோதல் வெடித்து. இது வன்முறையாக மாறிய நிலையில், காவல்துறையினர் கடும் நடவடிக்கைகள் மூலம் போராட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளனர்.

    இந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.முழு லாக்டவுன் காரணமாக குடிமக்கள் பெரும் பொருளாதாரம் பாதிப்பு ஆளாவதாகக் கூறி போராடி வரும் நிலையில், தங்களுக்கு அரசு கூறிய நிவாரணமும் கிடைக்கவில்லை என புகார் அளித்துள்ளனர்.

    Published by:Kannan V
    First published:

    Tags: China, Corona, Covid-19