• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பணத்துக்காக மகளை விபச்சார கும்பலுக்கு விற்பனை செய்த காதலனை கொலை செய்து பழிதீர்த்த தந்தை - நெட்டிசன்கள் பாராட்டு!

பணத்துக்காக மகளை விபச்சார கும்பலுக்கு விற்பனை செய்த காதலனை கொலை செய்து பழிதீர்த்த தந்தை - நெட்டிசன்கள் பாராட்டு!

Dad kill daughters lover

Dad kill daughters lover

தன்னுடைய மகள் விபச்சார கும்பலிடம் விற்பனை செய்யப்பட்டதற்கு அவருடைய 19 வயதாகும் காதலனும் காரணமாக இருக்கலாம் என ஜான் ஈசன்மன் முடிவுக்கு வந்திருக்கிறார்.

  • Share this:
தன்னுடைய மகளை விபச்சாரத்தில் தள்ளிய அவரது காதலனை, தேடிப் பிடித்து கொடூரமாக கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நெட்டிசன்கள் அவரை ஹீரோவாக வர்ணித்து பாராட்டி வருகின்றனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஸ்போகன் கவுண்டி நகரின் ஈஸ்ட் எவரெட் அவென்யூ பகுதியில் கடந்த அக்டோபர் 22ம் தேதியன்று கைவிடப்பட்ட நிலையில் ட்ரக் ஒன்றும் அதில் இருந்த பெட்டியில் இளைஞர் ஒருவரின் உடல் சிதைந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்த உடலை கைப்பற்றி இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தன்னுடைய பதின்பருவ மகளை விபச்சாரத்தில் தள்ளியதற்கு பழிவாங்க தந்தை ஒருவர் அந்த இளைஞரை கொடூரமாக கொலை செய்து உடலை பெட்டியில் அடைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இது குறித்து ஸ்போகன் கவுண்டி போலீசார் கூறியிருப்பதாவது, “60 வயதாகும் ஜான் ஈசன்மன் என்பவர் தன்னுடைய பதின்பருவ மகள் சீயாட்டிலில் உள்ள விபச்சார கும்பலிடம், கடந்த ஆண்டு அக்டோபரில் 1000 டாலர்களுக்காக விற்பனை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்.

Also read:  மரபணு சோதனை மூலம் தனக்கு 50 சகோதரர்கள் இருப்பதை அறிந்து ஷாக் ஆன பெண் டிக்டாக் பிரபலம்!

தன்னுடைய மகள் விபச்சார கும்பலிடம் விற்பனை செய்யப்பட்டதற்கு அவருடைய 19 வயதாகும் காதலனும் காரணமாக இருக்கலாம் என ஜான் ஈசன்மன் முடிவுக்கு வந்திருக்கிறார். பின்னர் ஒரு வழியாக தனது மகளை கண்டுபிடித்து கடந்த செப்டம்பரில் அவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் ஜான்.

மகள் மீட்கப்பட்டாலும் அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவரது காதலன் மீது ஆத்திரத்துடன் இருந்து வந்த ஜான், காதலனின் நடமாட்டத்தை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஏர்வே ஹைட்ஸ் எனும் பகுதியில் நடமாடிய தனது மகளின் காதலன் ஆரோன் சோரென்சனை பின் தொடர்ந்து வந்த ஜான், அவரை டிரக் ஒன்றில் கடத்தினார். மேலும் ஆரோனை தலையில் அடித்தும், பல முறை கத்தியில் குத்தியும் ஜான் கொலை செய்துள்ளார்.

Also read: முக்கிய சீன அரசியல் பிரபலம் மீது நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை பரபரப்பு செக்ஸ் புகார்

பின்னர் அதே டிரக்கில் இருந்த பெட்டியில் சடலத்தை அடைத்து வைத்து அந்த டிரக்கை ஓட்டிச் சென்று நார்த் ஸ்போகன் கவுண்டியில் உள்ள ஆள் அரவமற்ற பகுதியில் நிறுத்திவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அந்த டிரக் அங்கேயே பல நாட்களுக்கு நின்றுகொண்டிருந்தது, அதில் உடல் இருப்பது தெரியாமல், அதை ஓட்டிக்கொண்டு வந்து எவரெட் பகுதியில் யாரோ ஒருவர் நிறுத்திவிட்டு சென்ற நிலையில், அங்கிருந்தவர்கள் அந்த டிரக்கில் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்து காவல்துறைக்கு தெரியப்படுத்தவே இந்த கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜான் கைது குறித்து போலீசார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையை படித்த நெட்டிசன்கள் பலரும் அவரை ஹீரோவாக வர்ணித்து பதிவிட்டு வருகின்றனர். ஜான் தனது மகளுக்கு தீங்கிழைத்தவனுக்கு தக்க தண்டனையை கொடுத்திருப்பதாக கூறியுள்ளனர்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: