தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது, தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில், நம் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்க முடிகிறது. அன்பை, நினைவுகளை வாழ்வின் எதார்த்தமாக மாற்றி அழகாக பரிசளிக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டி அதன் ஒரு பகுதியாகும். இறந்து போனவர்களின் அழகான ஞாபகங்களை மீண்டும் உண்மையாக மாற்றும் அளவுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பெண் தனது அப்பாவுக்கு நெகிழ வைக்கும் பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
அப்பா-மகள் மற்றும் அம்மா-மகன் உறவுகளில் அதிக பிணைப்பு இருக்கும். எவ்வளவு வயதானாலும், ஒருவருக்கு தாயின் அன்பு தேவைப்படுவதாகவே இருக்கும். அதே போல, பெண்களுக்கு அப்பா தான் முதல் ஹீரோ. தன்னுடைய அப்பாவின் மீதுள்ள அளவில்லாத அன்பை வெளிப்படுத்த, தனது பாட்டியின் குரலை VR மூலமாக அப்பாவுக்கு பரிசளித்துள்ளார்.
விர்ச்சுவல் ரியாலிட்டியைப் பொறுத்தவரை, லைவ்வாக பார்க்கும் அனுபவங்களைப் பெற முடியும், VR சாதனங்கள் செயல்பட்டு வருகிறது என்பதை பலரும் அறிவோம். ஆனால், அதையும் மற்றொரு வகையில் மேம்படுத்த முடியும் என்பது சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது.
ஒரு பெண் தன்னுடைய அப்பாவுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக அவர் அம்மாவின், அதாவது தனது பாட்டியின் குரலை இணைத்து பரிசாக அளித்துள்ளார். தன்னுடைய அப்பா, அவர் அம்மாவின் இழப்பை எதிர்கொள்ள, தனிப்பட்ட முறையில் தொழில்நுட்ப வசதியோடு ஒரு கரடி பொம்மையை உருவாக்கியுள்ளார். அந்த கரடி பொம்மையில், இறந்த அம்மாவின் குரல் பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்பாவுக்கு இந்த ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் பரிசை அளித்த மகள், அதை அவர் திறக்கும் போது வீடியோவாக படம்பிடித்து, இணையத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ நெட்டிசன்களை நெகிழச் செய்துள்ளது.
ALSO READ | வானிலிருந்து கொட்டிய அதிசய ‘மீன் மழை’.. வியந்துபோன மக்கள் - படங்கள்
பரிசுப்பெட்டியைத் திறக்கும் போது, அதில் ‘பிறப்புச் சான்றிதழ்’ இருந்தது. அதில் கரடி பொம்மையின் பெயர் இருந்தது. பொம்மையின் பாதங்களை பிரஸ் செய்தவுடன், இறந்து போன அம்மாவின் குரலில் ‘ஹலோ டார்லிங்’ என்று பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஒலித்தது.
அந்த ஆடியோவின் முடிவில், ‘We love you dad, merry Christmas’ என்று அவருடைய மகளின் குரலும் ஒலித்தது. இணையத்தில் வைரலாகும் வீடியோ இங்கே.
சில வாரங்களுக்கு முன்பு, இதே போல தென் கொரியாவில் ஒரு நிகழ்வு ஏற்பட்டது. விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் பயன்படுத்தி இறந்து போன குடும்ப உறுப்பினர்களை, நெருக்கமானவர்களை இணைக்கும் தொலைக்காட்சி டாக்குமென்ட்டரி எடுக்கப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, தனது இறந்து போன மனைவியுடன் VR சாதனம் மூலம் இணைந்த தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு நபர் கண்ணீர் விட்டு கதறிய வீடியோவும் வைரலாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.