எக்ஸ்ரே மெசினுக்குள் புகுந்த சுட்டி சிறுவனால் பரிதவித்த தந்தை: வைரல் வீடியோ

news18
Updated: October 21, 2018, 2:25 PM IST
எக்ஸ்ரே மெசினுக்குள் புகுந்த சுட்டி சிறுவனால் பரிதவித்த தந்தை: வைரல் வீடியோ
ஸ்கேனிங் மெசினுக்குள் புகுந்த சிறுவன்
news18
Updated: October 21, 2018, 2:25 PM IST
குழந்தைகளை உடன் கூட்டிச் செல்வது பெற்றோர்களுக்கு மிக எளிதான காரியம் அல்ல. பெற்றோரின் கண்காணிப்பில் சிறிய கவனக்குறைவு ஏற்பட்டாலும் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தெற்கு சீனாவின் ஜியோலன் ரயில் நிலையத்துக்கு தந்தை ஒருவர் தனது மகனை அழைத்து வந்துள்ளார்.

பயணிகளின் லக்கேஜ்களை ஸ்கேன் செய்யும் எக்ஸ்ரே மெசின் அருகே வந்த சிறுவன், திடீரென மெசினுக்குள் புகுந்துள்ளான். ஆனால், இதனை அறியாத தந்தை சிறிது தூரம் வந்த பின்னர், தனது மகனை தேடியுள்ளார். சிறிது நேரம் அவர் பரிதவித்து “எங்கே எனது மகன்?” என கூப்பாடு போட்ட நிலையில், மெசினின் அந்த பக்கத்தில் இருந்து சுட்டி சிறுவன் எழுந்து வந்துள்ளான்.

மகனை தேடும் தந்தைசிறுவனின் உருவமும் எக்ஸ்ரே மெசினில் பதிவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இதேபோல, தனது கைப்பை தொலைந்து விடக்கூடாது என்பதற்காக பையுடன் எக்ஸ்ரே மெசினுக்குள் புகுந்து பெண் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஸ்கேனிங் மெசினுக்குள் மனிதர்கள் செல்வதால் உடனடி உடல் பாதிப்பு இல்லை என்றாலும், இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டியது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வீடியோவை காண..

First published: October 21, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...