கொரோனா வைரசை வேண்டுமென்றே வரவைத்த பெண் பாடகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொரோனா பாதித்த அவர் குணமடைந்து வருவதாக சமூகவலைதளங்களில் தெரிவித்த 2 நாட்களில் அவர் உயிரிழந்துள்ளார்.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெண் கிராமிய பாடகி ஹனா ஹொர்கா. 57 வயதான இவர் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான இயக்கங்களால் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால், ஹனா ஹெர்கா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. அதேவேளை அவரது கணவர் மற்றும் மகன் ஜென் ரெக் ஆகிய இருவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
தனது தாயிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு ஜென் ரெக் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், ஹனா ஹொர்கா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பவில்லை. தடுப்பூசி செலுத்திக்கொள்வதை விட கொரோனா வருவதே மேல் என அவர் கூறியதாக ரெக் தெரிவித்துள்ளார்.
Also read: மகளிடம் பேசிய திருமணமான இளைஞரை கொலை செய்த பக்கத்து வீட்டு குடும்பத்தினர்
மேலும் மகன் ரெக் கூறும்போது, எனக்கும், தந்தைக்கும் கடந்த கிறிஸ்துமஸ் அன்று, கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, நாங்கள் தனிமைப்படுத்திக்கொண்டோம். ஆனால், அம்மா எங்களுடன் முழு நேரமும் எந்த வித பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமல் தொடர்பில் இருந்தார் என்றார் மகன் ரெக்.
தடுப்பூசி செலுத்துவதற்கு எதிரான மனநிலையில் இருந்த ஹனா, தனக்கு கொரோனா வந்ததும் அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்து அதன்பின்னர் தியேட்டர் போன்ற பொதுஇடங்களுக்கு செல்லலாம் என நினைத்துள்ளார். கணவரும், மகனும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் ஹனா அதை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், கணவர் மற்றும் மகனை தொடர்ந்து ஹனாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹனாவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய ஹனா கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் உயிரிழந்தார்.
உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹனா தனது சமூகவலைதள பக்கத்தில், நான் குணமடைந்துவிட்டேன். கொரோனா தீவிரமானது. ஆகையால், தற்போது தியேட்டர் செல்வது முக்கியமானது. கடல் பயணம் தற்போது மிகவும் முக்கியம்’ என பதிவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பால் தனது தாயார் உயிரிழக்க கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பிரசாரமே காரணம் என ஹனாவின் மகன் ரெக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Also read:
கர்ப்பிணி வனத்துறை அதிகாரியின் முடியை பிடித்து இழுத்து தரையில் போட்டு கொடூர தாக்குதல் - வீடியோஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.