மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை... 117 நாட்கள் போராடி மருத்துவர்கள் சாதனை

உலக அளவில் 117 நாட்கள் மூளைச்சாவு அடைந்த ஒரு தாயின் வயிற்றில் வளர்ந்து குழந்தை பிறந்தது இதுவே முதல்முறையாகும்.

news18
Updated: September 4, 2019, 8:12 AM IST
மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை... 117 நாட்கள் போராடி மருத்துவர்கள் சாதனை
பெண் குழந்தை
news18
Updated: September 4, 2019, 8:12 AM IST
மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிப்பெண்ணுக்கு 117 நாட்களுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. வியக்க வைக்கும் இந்த மருத்துவ சாதனையை செக் குடியரசைச் சேர்ந்த மருத்துவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

செக் குடியரஸ் நாட்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பர்னோ (BRNO)பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் மூளைச்சாவு அடைந்த நிலையில் மருத்துவர்கள் அவரது கருவில் வளரும் குழந்தையை காப்பாற்ற முடிவெடுத்தனர் . உடனடியாக உயிர் காக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்டு அந்தப் பெண்ணுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. உணர்வற்ற தாயின் உடல்நிலையையும், அவரது கருப்பையில் உருவாகி வந்த உயிரின் வளர்ச்சியையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர் மருத்துவர்கள். கருவின் வளர்ச்சி முறையாக நடைபெற கருவிகளின் உதவியுடன் மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்பட்டது.

117 நாட்கள் நடந்த வாழ்வா? சாவா? போராட்டம் கடந்த ஆகஸ்ட் 15 அன்று முடிவுக்கு வந்தது. மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி இந்திய சுதந்திர தினத்தன்று இந்த உலகில் கால் பதித்தாள் குழந்தை எலிஸ்கா. அன்று குழந்தை பிறந்த மகிழ்ச்சியோடு எலிஸ்காவின் தாய் மறையும் துயரத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை அந்த குடும்பத்துக்கு ஏற்பட்டது. எலிஸ்கா பிறந்த அடுத்த சில மணி நேரங்களில் உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் படுத்த படுக்கையாக கருவைச் சுமந்த பெண் உயிரிழந்தார். உலக அளவில் 117 நாட்கள் மூளைச்சாவு அடைந்த ஒரு தாயின் வயிற்றில் வளர்ந்து குழந்தை பிறந்தது இதுவே முதல்முறையாகும்.


Also watch

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...