ட்ரம்ப்பைத் திட்டியப் பெண்... வேலை பறிபோனதால் தேர்தலில் நின்று வெற்றி..!

ட்ரம்ப் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரைத் தோற்கடித்து இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார் அப்பெண்.

ட்ரம்ப்பைத் திட்டியப் பெண்... வேலை பறிபோனதால் தேர்தலில் நின்று வெற்றி..!
தேர்தலில் வென்ற ஜூலி
  • News18
  • Last Updated: November 6, 2019, 4:19 PM IST
  • Share this:
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை திட்டியதால் பெண் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேலை பறிபோனது. இதன் மூலம் பிரபலமடைந்த அந்தப் பெண் உள்ளூர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஜூலி ப்ரிஸ்க்மேன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிபரின் கான்வாய் அருகே சைக்கிளில் சென்ற இப்பெண் அதிபரை நோக்கி நடுவிரலைக் காட்டி திட்டினார். இந்தப் புகைப்படம் வைரலாகி அப்பெண்ணுக்கு வேலை பறிபோனது. ஆனால், இதன் பின்னர் பிரபலமடைந்த பெண் விர்ஜினியா மாகாணத் தேர்தலில் போட்டியிட்டார்.

உள்ளாட்சித் தேர்தல் போன்றதொரு மாகாணத் தேர்தலில் மாகாண கண்காணிப்பாளராக வெற்றி பெற்றுள்ளார் ஜூலி. அதுவும், ட்ரம்ப் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரைத் தோற்கடித்து இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார் அப்பெண்.


தனது இந்தக் கதையை சமூக வலைதளங்களில் பெருமையுடன் பகிர்ந்து வருகிறார் ஜூலி.

மேலும் பார்க்க: வழக்கறிஞர்கள் தீக்குளிக்க முயற்சி... தீவிரமாகும் டெல்லி வழக்கறிஞர்கள்- போலீஸார் போராட்டம்
First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்