ஹோம் /நியூஸ் /உலகம் /

15 ஆயிரம் கோடி ரூபாய் பரிசு அறிவித்து அசர வைத்த லாட்டரி நிறுவனம் : ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு?

15 ஆயிரம் கோடி ரூபாய் பரிசு அறிவித்து அசர வைத்த லாட்டரி நிறுவனம் : ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு?

லாட்டரி

லாட்டரி

இதில் வெற்றி பெறும் நபர்களும் சாதாரணமானவர்களாக இருக்க முடியாது. இதுவரை அந்த லாட்டரியை 292,200,000 (29 கோடி) நபர்கள் வாங்கி உள்ளார்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, Indiaamericaamericaamerica

  அமெரிக்காவின் முதன்மையான பவர் பால் லாட்டரியில் கடந்த மூன்று மாதங்களாக யாரும் வென்று பரிசு பெறவில்லை. எனவே அனைத்து பணத்தையும் ஒன்று சேர்த்து நாளை யாருக்கு லாட்டரி விழுகிறதோ, அவருக்கு அந்த பணத்தை தர பவர் பால் அறிவித்துள்ளது.

  கடந்த 3 மாதங்களாக இதுவரை 40 முறை லாட்டரி குலுக்கல்கள் நடந்துள்ளன. இதில் யாரும் வெல்லவில்லை அல்லது வென்றவர்கள் யாரும் தான் ஜெயித்ததாக லாட்டரி சீட்டை காட்டவில்லை. எனவே இதுவரை வந்த மொத்த பரிசு தொகையான சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாயை நாளை ஜெயிக்கும் நபருக்கு வழங்கப்படும் என பவர்பால் லாட்டரி அறிவித்துள்ளது.

  மேலும், இதில் வெற்றி பெறும் நபர்களும் சாதாரணமானவர்கள் இருக்க முடியாது. இதுவரை அந்த லாட்டரியை 292,200,000 (29 கோடி) நபர்கள் வாங்கி உள்ளார்கள். இதில் ஒருவருக்குதான் அந்த மொத்த பணமும் கிடைக்கும். “இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை காண, மற்றவர்களை போலவே நாங்களும் ஆவலாக உள்ளோம்” என பவர்பால் நிர்வாகி ட்ரூ ஸ்விட்கோ தெரிவித்துள்ளார்.

  இதையும் படிக்க : ட்விட்டரில் இனி இவற்றிற்கெல்லாம் அனுமதியில்லை... வெளியானது புதிய விதிமுறைகள்..!

  இந்த லாட்டரியில் ஜெயிக்கும் நபர், வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை ஜெயிக்கும் முதல் நபராக இருப்பார். இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு பவர் பால் லாட்டரி பரிசாக அதுவரை இல்லாத அளவுக்கு 1.59 பில்லியன் டாலர் பரிசுத் தொகையை மூன்று போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  அந்த லாட்டரிக்கான குலுக்கல், இன்று(நவம்பர் 8) காலை 10 மணிக்கு நடக்கவிருந்த நிலையில், பாதுகாப்பு காரணக்களுக்காக தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: America, Lottery