இலங்கையில் ஊரடங்கு உத்தரவு! பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் ராணுவத் தளபதி

காவலர்கள், வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு, கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். அதனையடுத்து, இலங்கையில் தற்காலிமாக பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

news18
Updated: May 13, 2019, 10:08 PM IST
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு! பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் ராணுவத் தளபதி
பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையினர்
news18
Updated: May 13, 2019, 10:08 PM IST
பொதுச் சொத்துக்களுக்கோ அல்லது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் யாராவது இந்த ஊடரங்குச் சட்டத்திற்கு மத்தியில் செயற்பட்டால் அதிகபட்ச அதிகாரத்தை பன்படுத்த நேரிடும் என்று இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையான ஏப்ரல் 21-ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. கிறிஸ்துவ தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவ்வப்போது, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன. வடகிழக்கு இலங்கையில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் பரவிய பேஸ்புக் பதிவின் காரணமாக வன்முறை ஏற்பட்டது. இஸ்லாமியர்களின் கடைகள் மீது கிறிஸ்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.


அதனால், பதற்றம் ஏற்பட்டது. காவலர்கள், வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு, கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். அதனையடுத்து, இலங்கையில் தற்காலிமாக பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

அவருடைய எச்சரிக்கையில், ‘இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 04 மணிவரை போலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்களுக்கோ அல்லது பொது அமைதிக்கோ குந்தகம் ஏற்படும் வகையில் யாராவது இந்த ஊடரங்குச் சட்டத்திற்கு மத்தியில் செயற்பட்டால் அதிகபட்ச அதிகாரத்தை பன்படுத்த நேரிடும். அதிகபட்சமாக துப்பாக்கிச் சூட்டையும் நடத்துவதற்கு சந்தர்ப்பம் ஏற்படலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: May 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...