ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து குற்ற எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று பட்டப்பகலில், ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர், 64 வயதான டேக்ஸி ஓட்டுநர் ஒருவரை கொன்றுவிட்டு அவரது காரை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஆப்கானில் இது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. மேலும் இது தொடர்பாக தாலிபான் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதற்கு முன் பல்கலைகழக ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார், அதேபோல் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, கிழக்கு ஆப்கானில் 4 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். தாலிபான் ஆப்கானை கைப்பற்றிய பின், தொடர்ச்சியாக வேலையின்மையும் ஏழ்மையும் அதிகரித்து வரும் நிலையில், குற்ற எண்ணிக்கைகளும் தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. தொடர்ச்சியாக கொலை, தற்கொலை, தனிப்பட்ட தகராறுகள் தொடர்பான சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
ஆப்கானில் நிலவிவரும் இந்த மனித உரிமை சார்ந்த பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆப்கானில் 59% மக்கள் மனிதாபிமான உதவியை நாடி உள்ளனர் எனவும் கடந்த ஆண்டைவிட 60 லட்சம் பேருக்கு கூடுதலாக உதவி தேவைப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் ஆப்கானில் பட்டினியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தாலிபான்களின் ஆட்சி மாற்றமும், பல்வேறு தனியார் நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறியதும் தான் காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்.. பல மாகாணங்களுக்கு ரெட் அலர்ட் - நிலைமையை சமாளிக்க செயற்கை மழை?
அங்கு நடைபெற்ற போர் முடிவிற்கு வந்த நிலையிலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Taliban