கஷோகி மரணத்துக்கும் சவுதி இளவரசருக்கும் தொடர்பு உண்டு- ஐ.நா நிபுணர்

’ சவுதி அரேபியாவைச் சேர்ந்த 11 பேர் சந்தேகப் பட்டியலில் உள்ளனர். ’

Web Desk | news18
Updated: June 19, 2019, 7:36 PM IST
கஷோகி மரணத்துக்கும் சவுதி இளவரசருக்கும் தொடர்பு உண்டு- ஐ.நா நிபுணர்
ஜமால் கஷோகி (Image: Reuters)
Web Desk | news18
Updated: June 19, 2019, 7:36 PM IST
கஷோகி மரணத்துக்கும் சவுதி இளவரசருக்கும் தொடர்பு உண்டு என்பதற்கான தகுந்த ஆதாரம் உள்ளது என ஐநா உரிமைகள் ஆணையத்தின் நிபுணர் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம், சவுதி அரேபியாவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டார். துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் கஷோகி. இந்த மரணத்துக்குத் தகுந்த நீதி வேண்டும் என துருக்கி அரசு போராடி வருகிறது.

சவுதி இளவரசர் தான் கஷோகியின் மரணத்துக்குக் காரணம் என குற்றம் சுமத்துகிறது துருக்கி. இதற்கான ஆதாரத்தையும் தயார் செய்வதாகக் கூறியுள்ளது. கஷோகியின் மரணத்துக்கு சர்வதேச விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது.


இதற்காக ஐ.நா சபையின் சிறப்பு நிபுணர் ஆக்னஸ் கேலமர்ட் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவருடன் கூடுதலாக மூன்று சிறப்பு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் தற்போதைய சூழலில் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போக்கு குறித்து ஆக்னஸ் கேலமர்ட் கூறுகையில், “குற்றம் நடந்த இடத்தில் துருக்கி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கும் முன்னரே சவுதியால் கொலைக்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவைச் சேர்ந்த 11 பேர் சந்தேகப் பட்டியலில் உள்ளனர். இன்னும் விசாரணையில் முடிவு விளக்கப்படவில்லை. ஆனால், சவுதி இளவரசருக்கும் கஷோகி மரணத்துக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கான தகுந்த ஆதாரம் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: உலகின் மிகவும் மோசமான வாகன நெரிசல் மும்பையில்தான்..!
First published: June 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...