சாலையில் ராம்ப்வாக் நடந்த பசு மாடு - இணையத்தில் வைரல்!

சாலையில் ராம்ப்வாக் நடந்த பசு மாடு - இணையத்தில் வைரல்!

Cow

தெருக்களில் பசு நடந்து செல்லும் வீடியோ ட்விட்டரில் இப்போது வைரலாகி வருகிறது.

  • Share this:
தெருக்களில் பசு நடந்து செல்லும் வீடியோ ட்விட்டரில் இப்போது வைரலாகி வருகிறது. தெருக்களில் அந்தப்பசு வளைந்து நெளிந்து நடப்பது ஒரு வீடியோவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்விட்டரில் 27,000-க்கும் மேல் பார்க்கப்பட்ட இந்த வீடியோ 2,800 முறைகளுக்கு மேல் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. வீடியோவில், அந்த பசு கேமராவை நெருங்கும்போது, அதன் பின்னணியில் மேலும் பல பசுக்கள் நடந்து வந்துகொண்டிருக்கின்றன.

ஒரு யூசர், பசுவின் ‘கேட்வாக்கை’ பார்த்த பிறகு ‘ஓ ஸ்னாப்’ என்று ஒரு பூனையின் GIF ஐ வெளியிட்டார். மற்றொரு யூசர், பசு பூனை போல் கேட்வாக் செய்கிறது என்று கூறினார். ட்விட்டர் தளத்தில் மீண்டும் வைரலாகி வரும் இந்த வீடியோ முதலில் அக்டோபர் 2018-ல் வெளிவந்தது.

பால் நிறுவனமான லெஸ் புரொடியூட்ஸ் லெய்டியர்ஸ் அதை தங்கள் டைம்லைனில் வெளியிட்ட பின்னர் வைரலாகியது. இந்த வீடியோ எட்டு மில்லியனுக்கும் அதிகமான முறைகள் பார்க்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 2020-ல் மறுவடிவமைக்கப்பட்டு பல ட்விட்டர் யூசர்களால் பார்க்கப்பட்டது.

https://twitter.com/emesspace/status/1363824425691406337?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1363824425691406337%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fvideo-of-cow-performing-rampwalk-better-than-most-models-is-leaving-twitter-shook-3479564.html

ஒரு வர்ணனையாளர் அந்த பசுவின் நடையை பார்த்து அதை நவோமி காம்ப்பெல் என்று அழைத்தார். நவோமி ஒரு ஆங்கில சூப்பர்மாடல் ஆவார். இவர் 1980 களில் முதன்முதலில் மாடலிங்கை தொடங்கினார். இந்த வீடியோவை பார்த்த பிறகு பல யூசர்களும் மீம்ஸில் அந்த பசுவை வேற லெவலில் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

ஒரு யூசர் இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் சமர்ப்பிக்கவிருந்த ஒரு வேலையின் நீட்டிப்பை தனது ஆசிரியரிடம் கேட்க இந்த நடையை தான் நடந்து செல்ல இருப்பதாக கூறினார். ஒரு ட்விட்டர் யூசர் இந்த பசுவின் நடையால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் இந்த பசு என்னை உண்மையில் கிறங்கடிக்கிறது என்று கூறினார். பல யூசர்கள் அந்த பசு போதையில் இருப்பதாக கேலி செய்தனர். இதற்கு ஒரு வர்ணனையாளர், அந்த பசு குடிபோதையில் இல்லை, கொஞ்சம் நிதானமாக நடக்கிறது என்று கூறினார். ஒரு யூசர், 25 வயதான அமெரிக்க மாடல் கெண்டல் ஜென்னரை, விட பசுவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாக கூறினார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: