Home /News /international /

Cow Dung: அமெரிக்காவில் இந்தியரிடம் கைப்பற்றப்பட்ட மாட்டுச்சாணம் - ஏன் கைப்பற்றினார்கள் தெரியுமா?

Cow Dung: அமெரிக்காவில் இந்தியரிடம் கைப்பற்றப்பட்ட மாட்டுச்சாணம் - ஏன் கைப்பற்றினார்கள் தெரியுமா?

மாட்டுச்சாணம்

மாட்டுச்சாணம்

வாஷிங்டன் விமான நிலையம் ஒன்றில் இந்தியர் ஒருவரை பரிசோதனை செய்ததில், அவரிடம் பை நிறைய வறட்டி எனப்படும் மாட்டுச்சாணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. மருத்துவமனைகளின் முன்பு மூச்சுத்திணறலால் உயிருக்கு போராடும் நிலையில் இருக்கும் மக்கள் ஒருபுறம், குவியல் குவியலாக மனித உடல்களை எரிக்கும் காட்சிகள் மறுபுறம் என செய்தி சேனல்களில் வெளியாகும் காட்சிகள் மக்கள் மனங்களை வெகுவாக பாதித்துள்ளது.

மக்கள் முடிந்த வரை வெளியில் செல்லாமல் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் அவசியம் என அறிவுறுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மக்கள் வெளியில் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

மக்களும் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வீடுகளில் கபசுர குடிநீர் குடிப்பது, ஆவி பிடிப்பது என நம் நாட்டு மருத்துவமுறைகளையும் எடுத்துக்கொள்கின்றனர். அது பெரும்பாலானோருக்கு கைகொடுப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மக்கள் பலரும் பிற்போக்குத் தனமான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர்.

ALSO READ : "நாள் முழுவதும் டூடூல் வரைவேன்" - ஓராண்டாக டூடுல் வரைந்த 88 வயது முதியவர்!

சில இடங்களில் மாட்டுச்சாணத்தை உடலில் பூசிக்கொள்வது, மாட்டின் சிறுநீரை பருகுவது என மக்கள் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது பேராபத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் என சுகாதாரத்துறையினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் உள்ளிட்டோர் மாட்டின் சிறு நீரை பருகினால் கொரோனா பாதிப்பு ஏற்படாது எனக்கூறிவருவது வருத்தத்துக்குரியது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ALSO READ : மாட்டுச் சாணம், கோமியம் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது - இந்திய மருத்துவச் சங்கம் விளக்கம்

இது ஒருபுறம் இருக்க மாட்டுச்சாணத்தை நம் முன்னோர்கள் கிருமி நாசினிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். வீடுகளின் முன்பு மாட்டுச்சாணத்தை தெளிப்பதால் வீட்டிற்குள் பூச்சிகள் கிருமிகள் நுழையாது என்று கூறப்படுகிறது. மாட்டுச்சாணத்தை உறமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அதனை வறட்டியாக மாற்றி எரிபொருளாகவும் உபயோகிக்கின்றனர். இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு எரிபொருள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக வாஷிங்டன் விமான நிலையம் ஒன்றில் இந்தியர் ஒருவரை பரிசோதனை செய்ததில், அவரிடம் பை நிறைய வறட்டி எனப்படும் மாட்டுச்சாணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அமெரிக்காவில் மாட்டுச்சாணம் தடைசெய்யப்பட்டுள்ளது. அவை கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் தொற்று நோயை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. சமீப காலமாக அங்கு கால்நடை உரிமையாளர்களை இந்த நோய் பெரிதும் அச்சுறுத்தி வருகிறதாக கூறப்படுகிறது.

ALSO READ : மாட்டுச்சாணம் முதல் நீராவி வரை: கொரோனாவை குணப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்ட வினோதமான பொய் மருத்துவ முறைகள்..

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக மாட்டுச்சாணத்தை உடலில் பூசிக்கொள்வது போன்ற பிற்போக்குத்தனமான காரியங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அமெரிக்காவில் இந்தியரிடம் இருந்து மாட்டுச்சாணம் கைப்பற்றப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இருப்பினும் அந்த இந்தியர் மாட்டுச்சானத்தை அமெரிக்கா கொண்டு சென்ற உண்மையான காரணம் தெரியவில்லை.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Airport, America, Cow, Washington Post

அடுத்த செய்தி