Home /News /international /

ரூ.600க்கு கோவிஷீல்டு பூஸ்டர் தடுப்பூசி கிடைக்கும் - அதார் பூனாவாலா அறிவிப்பு

ரூ.600க்கு கோவிஷீல்டு பூஸ்டர் தடுப்பூசி கிடைக்கும் - அதார் பூனாவாலா அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

12-17 வயதினருக்கு சீரம் இந்தியா நிறுவனம் கோவோவாக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது.

சீரம் இந்தியாவின் கோவிஷீல்டு பூஸ்டர் தடுப்பூசிக்கு ரூ.600க்கு கிடைக்கும் என அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் தனியார் மையங்கள், மருத்துவமனைகளிலும் கிடைக்கும் என அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் கோவிஷீல்டு பூஸ்டர் தடுப்பூசி ரூ.600க்கு சந்தையில் கிடைக்கும் என சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பை சீரம் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுவருகிறது.

அரசின் இந்த அறிவிப்பு குறித்து பேசியுள்ள அதார் பூனாவாலா, "அரசின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன். முக்கியமான நேரத்தில் சரியான முடிவை அரசு எடுத்துள்ளது. மக்கள் தற்போது மீண்டும் வழக்கம் போல பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க - 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி

பல்வேறு நாடுகளில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.இந்த கோவிஷீல்டு பூஸ்டர் தடுப்பூசி ரூ.600க்கு வழங்கப்படும். மேலும், பூஸ்டர் டோஸ் செலுத்தும் மருத்துவமனைகள், வங்கும் விநியோகஸ்தர்களுக்கு பெரிய சலுகைகளை சீரம் இந்தியா நிறுவனம் வழங்கவுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

12-17 வயதினருக்கு சீரம் இந்தியா நிறுவனம் கோவோவாக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அவசர கால பயன்பாட்டு அனுமதியை அரசு வழங்கியுள்ளது. அரசின் முழுமையான முறையில் பூஸ்டார் என அனுமதி பெற சீரம் நிறுவனம் காத்திருக்கிறது. கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அந்த பூஸ்டர் தடுப்பூசியின் சந்தை விலை ரூ.900 என ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - ரூ. 1.50 கோடிக்கு கணக்கு காட்டாத மகனை, உயிருடன் தீயிட்டு கொளுத்திய தந்தை... பரபரப்பு சம்பவம்..

நாடு முழுவதும் 15 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96 சதவீதத்தினர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 83 சதவீதத்தினர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.

அரசின் புதிய உத்தரவின்படி வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பட்சத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம்.
Published by:Musthak
First published:

Tags: Corona Vaccine, Covid-19

அடுத்த செய்தி