முகப்பு /செய்தி /உலகம் / அண்டார்டிகாவிலும் ஊடுருவிய கொரோனா வைரஸ்

அண்டார்டிகாவிலும் ஊடுருவிய கொரோனா வைரஸ்

அண்டார்டிகா. | கோப்புப் படம்.

அண்டார்டிகா. | கோப்புப் படம்.

பூமியின் எந்தப் பகுதியையும் விட்டு வைக்காமல் பரவித்தீர்க்கும் போல் தெரிகிறது இந்த கொரோனா வைரஸ். கடைசியாக இதுவரை கோவிட்-19 எட்டிப்பார்க்காத துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் பரவி விட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பூமியின் எந்தப் பகுதியையும் விட்டு வைக்காமல் பரவித்தீர்க்கும் போல் தெரிகிறது இந்த கொரோனா வைரஸ். கடைசியாக இதுவரை கோவிட்-19 எட்டிப்பார்க்காத துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் பரவி விட்டது.

அண்டார்டிகாவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலி நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகாவில் ராணுவ முகாம் வைத்துள்ள பிற நாடுகள் இதுவரை கொரோனா வைரஸ் குறித்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டார்டிகா சென்ற கடற்படைக் கப்பலில் இருக்கும் வீரர்களுக்கு தொற்றியுள்ளதாக சிலி ராணுவத் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

லாஸ் எஸ்ட்ரில்லாஸ் கிராமத்தில் பொதுஜனம் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பரமாரிப்புக்காக இட்டுச் செல்லப்பட்ட ஊழியர்கள் 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இவர்களுக்கு தீவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

சார்ஜண்ட் ஆல்டியா என்ற இந்தக் கப்பலில் கடந்த வாரம் முதலில் 3 பேருக்கு கொரோனா தொற்றியது. இதனையடுத்து 208 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அண்டார்டிகாவில் அமெரிக்க ராணுவ திட்டங்களை மேற்பார்வையிடும் அமெரிக்க தேசிய அறிவியல் ஃபவுண்டேஷன் என்ற முகமை, சார்ஜண்ட் ஆல்டியா கப்பலில் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது தங்களுக்கும் தெரியும், ஆனால் நாங்கள் அவர்களுடன் எந்த வித தொடர்பிலும் இல்லை என்று உறுதியளித்தது.

First published:

Tags: Antarctica, Corona, CoronaVirus