உலகளவில் 44 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: உயிரிழப்பு 3 லட்சத்தை நெருங்கியது..!

Corona Virus | அமெரிக்காவில் அதிகபட்சமாக 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் 44 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: உயிரிழப்பு 3 லட்சத்தை நெருங்கியது..!
கோப்பு படம்
  • Share this:
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 லட்சத்தை கடந்துள்ளது.

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. கொரோனா வைரஸ்க்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

உலக பொருளாதாரத்தை மாற்றி அமைத்துள்ள கொரோனா வைரஸால் 44 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 98 ஆயிரத்தை தொட்டுள்ளது.


அமெரிக்காவில் அதிகபட்சமாக 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,83,892 பேர் குணமடைந்துள்ள நிலையில் 85,197 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஸ்பெயின், ரஷ்யா, பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் ரஷ்யாவின் உயிரிழப்பு குறைந்த சதவீதமே பதிவாகி உள்ளது. ரஷ்யாவில் 2,42,271 போர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2212 பேர் உயிரிழந்துள்ளனர்.













First published: May 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading