உலகளவில் 41 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!
Corona Viurs Update | அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 47ஆயிரத்தை கடந்துள்ளது.

கோப்பு படம்
- News18 Tamil
- Last Updated: May 10, 2020, 8:03 AM IST
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 2 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலின் மையமான சீனாவில் தற்போது இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளை உலுக்கி வருகிறது.
கொரேனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 14லட்சத்து 39ஆயிரத்து 919 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 47ஆயிரத்தை தாண்டிய நிலையில், உயிரிழப்பு 80ஆயிரத்தை தாண்டியுள்ளது. அங்கு 2 லட்சத்து 38ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, ஸ்பெயினில் 2 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ள நிலையில், இத்தாலியில் 30 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் சீனா, கனடா, பெருவை அடுத்து இந்தியா தொடர்ந்து 14வது இடத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலின் மையமான சீனாவில் தற்போது இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளை உலுக்கி வருகிறது.
கொரேனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 14லட்சத்து 39ஆயிரத்து 919 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 47ஆயிரத்தை தாண்டிய நிலையில், உயிரிழப்பு 80ஆயிரத்தை தாண்டியுள்ளது. அங்கு 2 லட்சத்து 38ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.