உலகளவில், ஒரு கோடியை கடந்தது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 5 லட்சத்தை கடந்துள்ளது.

உலகளவில், ஒரு கோடியை கடந்தது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை
கொரோனா
  • Share this:
சீனாவின் ஊஹான் நகரில் உருவான கொரோனா தொற்று, உலக நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 25 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் கடந்த சில நாட்களில் மட்டும் லட்சக்கணக்கானோரை கொரோனா தாக்கி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளது. 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 27 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் 5 லட்சத்து 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பிரிட்டனில் சற்று ஓய்ந்திருந்த தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் 3 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.பெரு, சிலி, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் உலகில் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மெக்சிகோவிலும் பாகிஸ்தானிலும் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளது.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading