• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு.. கடந்த இரு நாட்களில் 213 பேருக்கு தொற்று

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு.. கடந்த இரு நாட்களில் 213 பேருக்கு தொற்று

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ரஷ்ய எல்லையில் உள்ள ஹெய்ஹே நகரத்திலும் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது

  • Share this:
    சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சியில் அந்நாடு தீவிரமாக இறங்கியுள்ளது.

    உலகளவில் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சீனாவில், மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டாம் தேதியன்று நாடு முழுவதும் 93 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கடந்த இரு நாட்களில் முறையே 109 மற்றும் 104 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவற்றில் ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

    குறிப்பாக ரஷ்ய எல்லையில் உள்ள ஹெய்ஹே நகரத்திலும் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கடந்த மூன்றாம் தேதி முதல் அங்குள்ள வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில் சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. போதுமான அளவு உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மறுபடியும் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

    தைவானுடன் போர் மூள்வதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சில நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் கொரோனா பரவலைத் தடுக்கவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்படுகிறது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: