Home /News /international /

Covid-19: கருவுற்ற தாய்மார்களை கொரோனா பாதித்தால் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்படுமா?

Covid-19: கருவுற்ற தாய்மார்களை கொரோனா பாதித்தால் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்படுமா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கொரோனா வைரஸ் கருத்தரித்த பெண்களை அதிகம் பாதிக்கும் என்று ஆய்வுகளும் புற ஆதாரங்களும் நிரூபித்துள்ள நிலையில் கருவுற்ற தாயை கோவிட்-19 தொற்றினால் கருவில் உள்ள குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கொரோனா வைரஸ்  கருத்தரித்த பெண்களை அதிகம் பாதிக்கும் என்று ஆய்வுகளும் புற ஆதாரங்களும் நிரூபித்துள்ள நிலையில் கருவுற்ற தாயை கோவிட்-19 தொற்றினால் கருவில் உள்ள குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வட அமெரிக்க ஊடு கதிர் ஆய்வியல் அமைப்பில் இந்த கேள்விக்கான விடை ஆய்வு செய்யப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. இதில் கருவுற்ற தாய் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டால் கருவில் இருக்கும் குழந்தையின் மூளையை அது பாதிக்காது என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

    கருவுற்ற தாய்மார்களை மிதமானது முதல் தீவிர கொரோனா வைரஸ்களின் பல்வேறு வேரியண்ட்கள் தாக்கி வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். வைரஸ் செங்குத்தாக பரவும் தன்மை கொண்டது என்றாலும் கூட கருத்தரித்த தாயின் கரு வைரஸினால் பாதிக்கப்பட்டு மூளை பாதிப்பு ஏற்படுமா என்பது தெளிவாக தெரியவில்லை.

    இது தொடர்பாக ஜெர்மனியின் லுத்விக் பல்கலைக் கழகத்தின் ஊடுகதிர் துறை நிபுணர் டாக்டர் சோபியா ஸ்டாக்கிளைன் கூறும்போது, “சார்ஸ் கோவிட்-1 வைரஸ் பாதிக்கப்படும் தாய்மார்களின் பெரிய கவலையே அது கருவை பாதிக்குமா, குழந்தைகள் பிறப்பில் பாதிப்பு ஏற்படுமா, பிறந்த பிறகும் குழந்தைகளிடத்தில் அது பாதிக்குமா என்பதே. ஏனெனில் மற்ற வைரஸ் தொற்றுக்களுக்கு அப்படியான தன்மை உண்டு, வைரஸ் செங்குத்தாக கருவுக்குச் செல்லும் என்பது உண்மைதான் என்றாலும் இதன் தாக்கம் மற்றும் ரிஸ்க் என்னவென்பது தெளிவாகத் தெரியவில்லை.

    எனவே எங்கள் ஆய்வின் நோக்கமே இந்த இடைவெளியை நிரப்புவதுதான். கோவிட் பாதித்த கருவுற்ற 33 தாய்மார்களின் கருவை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து ஆய்வு நடத்தப்பட்டது. நோயாளிகள் கருத்தரித்து 28 வாரங்கள் ஆகியிருந்தன. சராசரியாக கருத்தரித்த பெண்களில் 18 மாதங்களில் அறிகுறிகள் தென்படும். பொதுவாக வாசனை இல்லாமல் போகும், ருசி இல்லாமல் போகும். ஒருமாதிரி வறட்டு இருமல், காய்ச்சல், மூச்சுவிடுதலில் சிரமம் இருக்கும்.” என்றார்.

    Also Read: இந்தியாவில் நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி? : இன்று ஆலோசனை

    இந்த ரேடியாலஜி ஆய்வில் கருத்தரித்த தாய்க்கு கோவிட் பாதித்தால் அது கருவின் அல்லது குழந்தையின் மூளையைப் பாதிப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் கருத்தரித்திருக்கும் போது கோவிட்-19 பாதிக்காமல் தற்காப்பது அவசியம். கர்ப்பஸ்த்ரீகளும் இரண்டு வாக்சின்கள் போட்டுக்கொள்வது அவசியம் என்கிறது இந்த ஆய்வு.

    இந்த ஆய்வு இதோடு முடிவதில்லை. 5 ஆண்டுகளுக்கு இந்த நோயாளிகளை ஆய்வாளர்கள் கண்காணித்து வருவார்கள், இதில் நரம்பியல் உட்பட பல விஷயங்கள் ஆய்வு செய்து முடிவுகளும் அதற்கான சிகிச்சைகளும் வெளியிடப்படவுள்ளன.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona, Corona impact, Covid-19, Pregnant

    அடுத்த செய்தி