Home /News /international /

3 லட்சம் மரணங்களுக்கு வாய்ப்பு.. 2,000 எலிகளை கொல்ல உத்தரவு - உலக நாடுகளில் கொரோனா சூழல் இதுதான்!

3 லட்சம் மரணங்களுக்கு வாய்ப்பு.. 2,000 எலிகளை கொல்ல உத்தரவு - உலக நாடுகளில் கொரோனா சூழல் இதுதான்!

Rats

Rats

உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மற்றும் சூழல் எப்படி உள்ளது என்பதை தற்போது அறிந்து கொள்வோம்

    புதிய வகை ஓமைக்ரான் வேரியண்ட் பரவலுக்கு பின்னர், உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதுடன், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மற்றும் சூழல் எப்படி உள்ளது என்பதை தற்போது அறிந்து கொள்வோம்

    1. உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்களில் முதல் இடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் தற்போதும் உச்சத்தில் இருந்து வருகிறது. தினசரி பாதிப்பு பல லட்சங்களில் பதிவாகி வருகிறது. வரும் மார்ச் மாத மத்தியில் அங்கு கொரோனா பரவல் குறையத் தொடங்கும், ஆனால் அதற்குள் அங்கு 50,000 முதல் 3,00,000 கொரோனா மரணங்கள் கூடுதலாக ஏற்படக் கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஓமைக்ரான் அங்கு மிதமான பாதிப்பை ஏற்படுத்தி வந்தாலும், அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்படுவதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

    2. ஓமைக்ரான் மாறுபாடு புதிய நோய்த்தொற்றுகளை சாதனை அளவில் அதிகரிப்பதால், ஜப்பான் அதன் மக்கள்தொகையில் பாதியை உள்ளடக்கும் வகையில் கோவிட்-19 கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது. பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா, நிபுணர் குழுவால் இத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்த பிறகு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Also read:  பாஜகவின் பதிலடி - கடும் அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்...

    3. இங்கிலாந்தில் கோவிட்-19 பரவுவதைச் சமாளிப்பதற்கான கட்டுப்பாடுகளை மறு ஆய்வு செய்ய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கிய அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார். கொரோனா வைரஸ் லாக்டவுனின் போது அவரது வீட்டில் விருந்துகள் நடத்தப்பட்டதாக வெளியான தகவலையடுத்து ​​​​போரிஸ் ஜான்சன் தலைமைத்துவ சவாலை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    4. ஹாங்காங் நிர்வாகம், மக்கள் செல்லப்பிராணிகளை முத்தமிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. சமீபத்தில் வீட்டில் வளர்கப்பட்டு வந்த 11 வெள்ளை எலிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து வெள்ளெலிகளை பெருமளவில் (2,000) கொல்ல உத்தரவிட்டது.

    Also read:  INS Ranvir போர்க்கப்பலில் வெடி விபத்து - 3 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு

    5. ஆஸ்திரேலியா அதிக கோவிட்-19 இறப்புகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என தெரிகிறது. கொரோனா பரவல் காரணமாக தினசரி அதிகளவு பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவதுடன், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ளது,

    6. அமெரிக்க குடும்பங்கள் இனி 4 கொரோனா பரிசோதனைகளை இலவசமாக செய்து கொள்ள முடியும். COVIDTests.gov என்ற வெப்சைட்டில் பதிவு செய்தால் போதும் இலவச பரிசோதனை கருவிகள் 12 நாட்களுக்குள் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும்.

    7. உலகையே ஆட்டிப்படைத்து வரும் ஓமைக்ரான் வகை கொரோனா, முதல் முறையாக வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ளது.

     
    Published by:Arun
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி