வடகொரியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது, இதனை அந்நாட்டு அரசு கடந்த வாரம் ஒப்புக் கொண்டது. இதுவரை கோவிட் காய்ச்சலுக்கு 56 பேர் பலியாகியுள்ளனர். மற்றும் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்களை அதாவது 15 லட்சம் பேரை கொரோனா தொற்றியுள்ளது. நாட்டிற்கு வெளியே உள்ள பார்வையாளர்களின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் அங்கு தீவிரமாகப் பரவி வருகிறது. வட கொரியாவின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடக அறிக்கைகள் என்னவாக இருந்தாலும், இந்த கொரோனா பரவல் வெளியில் சொல்லப்படுவதை விட பல மடங்கு தீவிரமானதாக இருக்கும்.
வட கொரியாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் செவ்வாயன்று மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலியானதாகவும் 2,69,510 பேருக்கு கொரோனா வைரஸினால் ஏற்படும் காய்ச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பரிசோதனை வசதிகள் எப்படி என்று தெரியவில்லை, இதனால் கண்டறியப்படாத கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வட கொரிய மருத்துவர்கள் வைரஸ் பரவலை எதிர்த்து மருந்துகளின் விநியோகத்தை அதிகரித்துள்ளதாக அரசு ஊடகம் செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், தடுப்பூசி போடப்படாத மக்களிடையே பரவலைத் தடுக்கும் முயற்சியில் நாடு தழுவிய லாக் டவுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். லாக் டவுனை முழுமையாகச் செயல்படுத்த அவர் ராணுவத்தையும் நிறுத்தியுள்ளார்.
கிம்மின் உத்தரவின் பேரில், கொரிய மக்கள் ராணுவப்படை தலைநகர் பியாங்யாங்கில் உள்ள அனைத்து மருந்தகங்களுக்கும் அவசரமாக அனுப்பப்பட்டது, KCNA ஏஜென்சி கூறியது போல் இந்நகரம்தான் தொற்று நோயின் மையமாக உள்ளது.
அண்டை நாடான தென் கொரியா தடுப்பூசிகள், முகமூடிகள் மற்றும் சோதனைக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அனுப்ப முன்வந்தது, ஆனால் வடக்கு அதன் முயற்சியை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை்.
வட கொரியா உலகின் மிக மோசமான சுகாதார அமைப்புகளில் ஒன்றாகும், மோசமான, சிகிச்சைக்குத் தேவையான உள்கட்டமைப்புகள் இல்லாத மருத்துவமனைகள், தீவிர சிகிச்சைப்பிரிவுகள் இன்மை, போதிய கொரோனா வைரஸ் சிகிச்சை மருந்து மாத்திரைகள் இல்லாமை, கொரோனாவை சோதிக்கும் வெகுஜன சோதனை முறைகள் இல்லாமை ஆகியவை வடகொரியாவை கோவிட் தாக்குதலுக்கு பயங்கரமாக இரையாக்கும் வாய்ப்பு கொண்டதாக உலக நாடுகள் பார்க்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona spread, Covid-19, North korea