6,000 பேரை பணிநீக்கம் செய்யும் ஆஸ்திரேலிய விமான நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக குவான்டஸ் 6,000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

6,000 பேரை பணிநீக்கம் செய்யும் ஆஸ்திரேலிய விமான நிறுவனம்
மாதிரிப்படம். (Image Source: AFP)
  • Share this:
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகமெங்கும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலகில் உள்ள பெரும் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களுக்கு மாத ஊதியம் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக குவான்டஸ் 6,000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.மேலும் 15,000 ஊழியர்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரை கட்டாய விடுப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலன் ஜோய்ஸ் தெரிவித்துள்ளார்.Also read... ”அத்தியாவசிய தேவைக்கு நடந்து செல்லவேண்டும்” - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின்சிங் மீது வழக்கு பதிவுசெய்த போலீஸ்..

கொரோனா ஊரடங்கால் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். ஒரு வருடத்திற்கு 100 விமானங்களை இயக்கப்போவதில்லை என்றும் குவான்டஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading