அமெரிக்காவில் 10 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு 61,699-ஆக அதிகரிப்பு..!

அமெரிக்காவில் கொரோனாவால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 47,411 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் 10 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...  உயிரிழப்பு 61,699-ஆக அதிகரிப்பு..!
மாதிரி படம்
  • Share this:
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து உள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61,699-ஆக அதிகரிப்பு அதிகரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி கொரோனா வைரஸால் சர்வதேச அளவில் இதுவரை 32 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளுக்கு மேல் தடம்பிடித்துள்ளது.

அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸின் பாதிப்பு உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் இதன் பாதிப்பு 4 மடங்காக உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


அமெரிக்காவில் கொரோனாவால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 47,411 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 61,669 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவை அடுத்து இத்தாலியில் 27,682 பேரும் ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன் முறையே 24275, 24087 மற்றும் 26097 பேர் உயிரிழந்துள்ளனர்.

First published: April 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading