Corona vaccine China | கொரோனா தடுப்பூசியில் சீனா சாதனை- 100 கோடி மக்களுக்கு செலுத்தப்பட்டதாக சீன சுகாதார ஆணையம் தகவல்

சீனா

சீனாவில் 100 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அந்த நாட்டு சுகாதார ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.

  • Share this:
    சீனாவில் 100 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அந்த நாட்டு சுகாதார ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.

    இத்தனை விரைவில் கொரோனா தடுப்பூசியை 100 கோடி மக்களுக்குச் செலுத்தி விட்டதா என்ற கேள்வியையும் சில ஊடகங்கள் எழுப்பி வருகின்றன.

    கொரோனா என்ற பெரும் தொற்று சீனாவில் உருவானது. தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில் பொது மக்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது.

    இதுவரை சீனாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது .என்றாலும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தை சீனா வெளியிடவில்லை.

    உலகம் முழுதும் கொரோனாவைப் பரப்பி விட்டு தான் பாதுகாப்பாக வெளியே வந்து விட்டது என்று உலக அளவில் கடும் விமர்சனங்களை சீனா சந்தித்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தடுப்பூசி குறித்து சினுவா செய்தி நிறுவனம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

    ''உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 7 கொரோனா தடுப்பூசிகளுக்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது. இதில் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் குழந்தைகளுக்குச் செலுத்தும் தகுதியுடையவை. இதன் காரணமாக கடந்த 5 நாட்களில் சீனாவில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், முதல் முறையாக சீனாவில்தான் 100 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீனாவில் இதுவரை 43%க்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகத்தான் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாகத் தடுப்பூசி செலுத்துவதை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
    Published by:Muthukumar
    First published: