ஹோம் /நியூஸ் /உலகம் /

தென் கொரியாவை விடாத கொரோனா: ஒரே நாளில் 35,883 பேருக்குத் தொற்று- 17 பேர் பலி

தென் கொரியாவை விடாத கொரோனா: ஒரே நாளில் 35,883 பேருக்குத் தொற்று- 17 பேர் பலி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 காய்ச்சல் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து எண்ணூற்றி எண்பத்து மூன்று என்று தென் கொரிய சுகாதாரத்துறை புள்ளி விவரம் கூறுகிறது.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 காய்ச்சல் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து எண்ணூற்றி எண்பத்து மூன்று என்று தென் கொரிய சுகாதாரத்துறை புள்ளி விவரம் கூறுகிறது.

இந்த புதிய தொற்றுகளின் மூலம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு இதுவரை 1 கோடியே 92 லட்சத்து 47 ஆயிரத்து 497 ஆக உள்ளது.

இதற்கு முன் இந்த புதிய அலையில் தினசரி பாதிப்பு நாளொன்றுக்கு 65,433 வரை சென்றது. இப்போது டெஸ்ட்கள் குறைந்திருப்பதால் பாதிப்பு எண்ணிக்கையும் பாதியாகக் குறைந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

ஒருவாரத்துக்கு முன்பு கூட தென் கொரியாவில் நாள் தொற்று எண்ணிக்கை 26,279 ஆக இருந்தது. இது அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என்கிறது கொரியா நோய்க்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு அமைப்பு கூறியுள்ளது.

கடந்த வாரங்களில் தினசரி தொற்று சராசரி 65,655 என்று அச்சுறுத்தலாக இருந்தது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து தென் கொரியாவுக்குள் வரும் தொற்று எண்ணிக்கை நேற்று 343 ஆக அதிகரித்திருந்தது. இதன் மூலம் தினசரி பாதிப்பு ஒரே நாளில் 41,847 ஆக இருந்தது. 17 பேர் மரணமடைந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 24,890 ஆக அதிகரித்துள்ளது.

மொத்த மரண விகிதம் 0.13%. சீரியஸாக இருக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்றுவரை 144 ஆக உள்ளது என்று தென் கொரியா சுகாதாரத் துறை கூறியுள்ளது.

அமெரிக்காவிலும் கடந்த 7 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 92 ஆயிரத்து 798 ஆக உள்ளது, இந்தியாவில் 115,158 ஆக உள்ளது. அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் 2,747 பேர் பலியாகியுள்ளனர்.

First published:

Tags: Corona spread, CoronaVirus, Covid-19, South Korea