காருக்குள் செக்ஸ்... சுற்றிவளைத்து அபராதம் விதித்த காவல்துறை!

மாதிரி படம்

கொரோனா காலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி, பொறுப்பில்லாமல் பொதுவெளியில் சுற்றித்திரிந்ததாக கூறி இருவருக்கும் தலா 200 டாலர்கள் என 400 டாலர்களை அபராதமாக விதித்தனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இங்கிலாந்தில் இரவு நேரத்தில் காருக்குள் இருந்தவாறு உடலுறவில் ஈடுபட்ட காதலர்களை பிடித்த காவல்துறை, கொரோனா விதிமுறைகளை மீறியதாக 400 டாலர் அபராதம் விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு உலகம் முழுவதும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேகமாக பரவும் இந்த தொற்றுநோயை தடுக்க, சமூக விலகல் மட்டுமே மிகச்சிறந்த மருந்து என மருத்துவர்கள் கூறியுள்ளதால், அதற்கேற்ப ஒவ்வொரு நாடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 2வது அலை கொரோனா வைரஸ் பரவி வருதால், அந்த நாடுகளில் மீண்டும் பல பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

  புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தொலைக்காட்சி, ரேடியோ, நாளிதழ்கள் மூலம் தெரியப்படுத்தி வரும் அரசு, உள்ளூர் அரசு அலுவலர்கள் மூலமும் விழிப்புணர்வுடன் கூடிய எச்சரிக்கையையும் கொடுத்து வருகிறது. இருப்பினும், இந்தக் கட்டுப்பாடுகள் காதலர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாலும், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்வதை வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கின்றனர். பலருக்கு ரகசிய சந்திப்புகளில் பிரச்சனை இல்லையென்றாலும், ஒரு சிலர் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். அப்படியான தனிமையில் சந்தித்துக்கொண்ட காதலர்கள் இங்கிலாந்தில் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் டெர்பி (Derby) பகுதியில் காதலர்கள் இருவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மார்ச் 1 ஆம் தேதி சந்தித்து உள்ளனர். அப்போது, காருக்குள் இருந்தவாறு இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

  அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், கார் ஒன்று தனிமையில் நின்று கொண்டிருப்பதை கவனித்து அங்கு சென்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். காருக்குள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், கொரோனா காலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி, பொறுப்பில்லாமல் பொதுவெளியில் சுற்றித்திரிந்ததாக கூறி இருவருக்கும் தலா 200 டாலர்கள் என 400 டாலர்களை அபராதமாக விதித்தனர்.

  Also read... மருத்துவரைக் கடித்தேன்' 10 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்த பெண்... டிவிட்டரில் சுவாரஸ்யம்!

  இதுகுறித்து விளக்கமளித்துள்ள டெர்பி காவல்துறை, அந்தப் பகுதியில் காவலர்கள் ரோந்து செல்லும்போது காருக்குள் இளம் காதலர்கள் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது. அவர்களை கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக எச்சரித்ததுடன், அபாரதமும் வசூலிக்கப்பட்டதாக கூறியுள்ளது. இந்த சம்பவம் Erewash Response Unit டிவிட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. காவல்துறையின் நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர். இதேபோல் மற்றொரு சம்பவம் ஒரு மாதத்துக்கு முன்பு டெர்பிஷையர் (Derbyshire) பகுதியில் அரங்கேறியுள்ளது. அங்கும் காருக்குள் உடலுறவில் ஈடுபட்ட காதலர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களுக்கும் அபராதம் வசூலித்துள்ளனர். சுமார் 100 மைல்கள் கடந்து வந்து காதலியை பார்த்த காதலன், ஸ்டாண்டன் ஹரோல்ட் நீர்த்தேக்க (Staunton Harold Reservoir) பகுதிக்கு நள்ளிரவில் அழைத்துச் சென்று மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: