Home /News /international /

தொழில்நுட்பத்தின் உச்சம் உலக சமாதானத்தை ஏற்படுத்ததே - உலக அமைதி தினம்!

தொழில்நுட்பத்தின் உச்சம் உலக சமாதானத்தை ஏற்படுத்ததே - உலக அமைதி தினம்!

உலக சமாதான தினம்

உலக சமாதான தினம்

  • News18
  • Last Updated :
    தீவிரவாதம், போர் போன்ற செயல்களிலிருந்து விடுபட்டு உலக நாடுகளில் அமைதி நிலவ ஐ.நா. சபையானது ஆண்டு தோறும் செப். 21-ம் நாளை சர்வதேச அமைதி தினமாக கொண்டாடுகிறது.

    உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானமாகும். வரலாற்றில் பல யுத்தங்கள் நடை பெற்றுள்ளன. 20-ம் நூற்றாண்டின் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களை பழிகொண்டன. மக்களின் வாழ்வாதரங்களை சூறையாடியது. 2-ம் உலகப் போருக்குப்பின் உலக சமாதனத்திற்காக பல முயற்சிகளை யுனெஸ்கோ எடுத்துவருகிறது. மனித உரிமைக்கு அடிப்படையானது உலக சமாதானமே. போர்ச்சூழல் நிலவி வரும் நாட்டில் மனித உரிமைக்கு இடமில்லை.  மனித உரிமைகளையும் கடமைகளையும் செயல்படுத்துவதுற்கு உலக சமாதானமே இன்றியமையாதது. மக்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் முக்கியமானது சமாதானம், மேம்பாடு மற்றும் ஜனநாயகமுமே.

     

    உலக அமைதி தினம்


    நாடுகளுக்கு இடையே வர்த்தக ரீதியான போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஏதாவது இரு நாடுகளில் சண்டை ஏற்பட்டால், அது ஒட்டுமொத்த உலக நாடுகளின் அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். உள்நாட்டு போர் மற்றும் இருநாட்டு போர்களினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் மற்றும் உடமைகளை இழக்க நேரிடுகிறது. அகதிகளாகவும் மாற்றுகிறது. போர் எந்தச் சூழலிலும், எந்தப் பிரச்னைக்கும் ஒரு தீர்வாகாது.

    வடகொரியா தொடர்ந்து அணுசக்தி மற்றும் ஏவுகணைகளை சோதனை செய்து பதற்றத்தை உருவாக்கியது. இன்றளவும்  சிரியாவில் உள்நாட்டுப் போர் ஓய்ந்தபாடில்லை. இந்திய எல்லையில், பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத செயல்களை நடத்துகிறது.  அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், பயங்கரவாதத்தை ஒழித்து, அமைதியான உலகை உருவாக்கலாம்.

    இன்றுள்ள விர்சுவல் உலகத்தில் விரல் நுனியின் அசைவில் எண்ணற்ற தகவல்களை பெறுகிறோம். ஆனால் இந்த முன்னேற்றம் கோடிக்கணக்கான மக்களை அழித்தொழிக்கும் போர்களுக்கு மாற்றாக அமையவில்லை. போர் உணர்வினை சமாதான உணர்வாக மாற்றுவதுதான் வளரும் தொழில்நுட்பத்தின் சிறந்த சாதனையாக இருக்கும்.
    Published by:Saroja
    First published:

    Tags: International Day of Peace, UNO

    அடுத்த செய்தி