Home /News /international /

நடிகர் வில் ஸ்மித் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.. ஆஸ்கர் அமைப்பு

நடிகர் வில் ஸ்மித் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.. ஆஸ்கர் அமைப்பு

வில் ஸ்மித்

வில் ஸ்மித்

அன்பு நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. என்றும் இச்செயலால் பெரும் சங்கடம் அடைந்திருப்பதாகவும் வில் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

    ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தொகுப்பாளரை தாக்கியதற்கு நடிகர் வில் ஸ்மித் மன்னிப்பு கோரியுள்ளார். வில் ஸ்மித்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆஸ்கர் அமைப்பு , இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

     அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா திங்கள் கிழமை கோலாகலமாக நடைபெற்றது. கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக ஆஸ்கார் விருது நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து நகைச்சுவையாக பேசினார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஜடா பிங்கெட்டின் கணவரும் ஹாலிவுட் நடிகருமான வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

    Also Read: ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து 40 லட்சம் பேர் வெளியேற்றம்... ஐ.நா. தகவல்


    பின்னர் அவர் தனது இருக்கைக்குத் திரும்பி, கிறிஸ் ராக்கை நோக்கி கூச்சலிட்டார். அப்போது அரங்கம் முழுவதிலும் ஒலி முடக்கப்பட்டது. ஸ்மித்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அகாடமி அமைப்பு, இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அகாடமி குழு, புதன்கிழமை இரவு ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

    இந்த நிலையில், விருது நிகழ்ச்சியின் போது, தான் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாக நடிகர் வில் ஸ்மித் தெரிவித்துள்ளார். தனது செயலால் பெரும் சங்கடம் அடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். விழாவில் நகைச்சுவை என்பது இயல்பானது தான் என்றாலும், தன் மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்தது உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    அன்பு நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. என்றும் இச்செயலால் பெரும் சங்கடம் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள வில் ஸ்மித், கிறிஸ் ராக்கிடமும், நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமும், மன்னிப்பு கோருவ்தாகவும் கூறியுள்ளார்

    அலோபீசியா அரேட்டா என்ற நோயால் பாதிக்கப்பட்டவர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித். அலோபீசியா அரேட்டாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திட்டு திட்டாக முடி கொட்டும். தலையில் மட்டுமல்லாமல் கண் இமைகள், புருவங்கள் என உடல் முழுவதும் முடி உதிரும். பரம்பரை, ஹார்மோன் மாற்றங்கள், தீவிர மன உளைச்சல் ஆகியவற்றால் இக்குறைபாடு ஏற்படுகிறது. இந்த நோய்க்கு மிக குறைந்த அளவிலேயே சிகிச்சை முறைகள் உள்ளன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Oscar Awards

    அடுத்த செய்தி