இந்தோனேசியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரைஸ் குக்கரை திருமணம் செய்து, 4 நாட்களிலேயே அதனை விவாகரத்து செய்து இணைய பிரபலம் ஆகியுள்ளார்.
இந்தோனேசியாவை சேர்ந்வர் கொய்ருல் அனம் (Khoirul Anam). இவர் தன்னுடைய திருமணம் தொடர்பான புகைப்படங்களில் பேஸ்புக் சமூக ஊடகத்தில் வெளியிட்டார். அதனை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம், ரைஸ் குக்கரை அவர் திருமணம் செய்திருந்ததுதான். கொய்ரூல் அனம் மணமகன் போல் உடையணிந்து ரைஸ் குக்கரை மணமகள் போல அலங்கரித்து, அதனை திருமணம் செய்துகொண்டதோடு. அதற்கு முத்தம் தருவது போன்ற புகைப்படங்களையும் சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.
மேலும் தனது ரைஸ் குக்கர் அழகாகவும், அன்பாகவும், நன்றாக சமைப்பதாலும் அதனை திருமணம் செய்துகொண்டதாக கொய்ரூல் அனம் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அவரது பதிவில் பலரும் கருத்துகள் தெரிவித்திருந்தனர்.
தனது விசித்திர செய்கை மூலம் சமூக ஊடகத்தில் கவனம் பெற்ற கொய்ரூல் அனம் தனது அடுத்த செயல் மூலம் சமூக ஊடகத்தில் மீண்டும் வைரல் ஆகியுள்ளார். அதாவது, தனது மனைவியான ரைஸ் குக்கர் வெறும் அரிசி சாதத்தை மட்டுமே சமைப்பதினால் அதனை விவாகரத்து செய்வதாக முகநூலில் அறிவித்தார்.
கொய்ருல் அனம், ஏற்கனவே பல விசித்திரமான நடவடிக்கைகள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது. இதனிடையே, அடுத்து கொய்ரூல் அனம் எதனை திருமணம் செய்துகொள்வாரோ என்று பலரும் ஆச்சரியத்துடன் காத்து கிடக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.