பெருவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிபர் மார்டின் விஸ்காரா பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2011 முதல் 2014 வரை விஸ்காரா ஆளுநராக இருந்த மொகேகுவா பிராந்தியத்தில் உள் கட்டமைப்பை உருவாக்கும் நிறுவனங்களிடமிருந்து 4.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட பெருவில், விஸ்காரா கொரோனாவை கையாண்ட விதமும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில், பெரு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 130 உறுப்பினர்களில் 105 பேர் விஸ்காராவுக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து, தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த விஸ்காரா, இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதில்லை என்று தெரிவித்தார்.
Also read: ட்ரம்பின் திட்டங்களைக் கைவிட முடிவு.. ஒபாமா ஆட்சிகாலத்தை பின்பற்ற ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல்
ஒரு நாட்டின் அதிபர் இப்படியான குற்றச்சாட்டுகளின் காரணமாக பதவி விலகுவது அசாதாரணமான ஒன்று என்பதால் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.