அமெரிக்கப் பள்ளியில் 7 ஆண்டுகளில் முதல் முறையாக பூத்துள்ள கார்ப்ஸ் பூ - சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
அமெரிக்கப் பள்ளியில் 7 ஆண்டுகளில் முதல் முறையாக பூத்துள்ள கார்ப்ஸ் பூ - சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
அரிதிலும் அரிதாக பூத்திருக்கும் கார்ப்ஸ் பூவை பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். பூச்சிகள் சில்வற்றை ஈர்க்கும் இந்தப் பூ அதன் மூலமாக மகரந்தச் சேர்க்கையை நடத்துகிறது.
அரிதிலும் அரிதாக பூத்திருக்கும் கார்ப்ஸ் பூவை பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். பூச்சிகள் சில்வற்றை ஈர்க்கும் இந்தப் பூ அதன் மூலமாக மகரந்தச் சேர்க்கையை நடத்துகிறது.
தமிழில் பிண பூ அல்லது சவ பூ என்று அழைக்கப்படும் கார்ப்ஸ் பூ அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் பூத்துள்ளது. உலகிலேயே மிக மோசமான அழுகிய வாசம் கொண்டது என்பதால் இந்த பூவிற்கு பிண பூ என்ற பெயர் வந்திருக்கலாம். இந்த அழுகிய வாசத்தைக் கொண்டு பிணம் தின்னும் வண்டுகள் மற்றும் விஷ பூச்சிகள் சிலவற்றை ஈர்க்கும் இந்தப் பூ அதன் மூலமாக மகரந்தச் சேர்க்கையை நடத்துகிறது.
மிச்சிகன் மாகாணத்தின் ஜிவிஎஸ்யூ அலாண்டலே பள்ளி வளாகத்தின் இரண்டாவது தளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக இந்த பூ வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், புதன் முதல் வெள்ளி வரையிலான நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் இந்த பூவை காண்பதற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவை பூர்வீகமாக கொண்டது :
தற்போது கார்ப்ஸ் பூ இனம் அழியும் தருவாயில் உள்ளது. இது இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. இதன் மொட்டு மலரும் நிலையை அடைவதற்கு சுமார் 10 ஆண்டுகளை எடுத்துக் கொள்ளுமாம். வனப்பகுதியில் இது பூக்கும் போது சுமார் 12 அடி உயரம் மற்றும் 5 அடி அகலத்தில் பரந்து விரிந்து காணப்படும்.
அதுவே, வீடுகளுக்கு அருகாமையில் வளர்க்கப்படும் போது இது சுமார் 6 முதல் 8 அடி உயரம் கொண்டதாக மலருகிறது. இந்த பூ வளருவதற்கு தட்பவெட்ப சூழல் மிகுதியாக இருக்க வேண்டும்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்த அதிசயம் :
மிச்சிகன் மாகாணத்தின் ஜிவிஎஸ்யூ கல்வி நிலையத்தில் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூ பூத்திருந்தது. தற்போது கடந்த 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மலர்ந்துள்ளது. பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட முதல் நாளிலேயே சுமார் 1,800 பேர் இதை நேரில் பார்த்து ரசித்தனர்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பார்வையாளர்கள் :
அரிதிலும் அரிதாக பூத்திருக்கும் கார்ப்ஸ் பூவை பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். இதுகுறித்து பார்பரா கைண்ட்ஷி கிரீன்ஹவுஸ் அமைப்பின் கண்காணிப்பாளர் கிறிஸ்டியானா ஹிப்ஸியர் கூறுகையில், “இது மிகுந்த ஆச்சரியம் தருகிறது. கடந்த திங்கள் (ஏப்.18) இரவு வரை இதனை 1,800 மக்கள் பார்வையிட்டுள்ளனர். பொதுவாக பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாத கிரீன்ஹவுஸ் ஒன்றில், இந்த அளவுக்கு பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வருவது மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது’’ என்று கூறினார்.
மலரின் பெயர்கள் : Corpse Flower, Wonders of Nature, கார்ப்ஸ் மலர், பிண பூ, இயற்கையின் அதிசயம்
வனப்பகுதிகளில் சுமார் 1,000க்கும் குறைவான கார்ப்ஸ் தாவரங்களே எஞ்சியிருப்பதாக அமெரிக்க பொடானிக்கல் கார்டன் தெரிவிக்கிறது. கார்ப்ஸ் மலர் பூத்திருக்கும் போது, ஆணின் பிறப்புறுப்பு போலவே காட்சியளிப்பதால் இதற்கு ‘ஆணுறுப்பு பூ’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.
Published by:Elakiya J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.