இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நடைன் டோரிஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இங்கிலாந்தில் தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்து சுகாதார அமைச்சர் நடைன் டோரிஸின் ரத்த மாதிரியைச் சோதித்ததில், அவருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதிசெய்திருக்கும் அமைச்சர் நாடின் டோரிஸ், தற்போது அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், குணமாகும் என நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் அவர் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்திருப்பதால், அவர்களுக்கும் நோய்த்தொற்று பரவியிருக்குமோ என்னும் அச்சம் எழுந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.